உள்ளடக்கத்துக்குச் செல்

சாமநத்தம்

ஆள்கூறுகள்: 9°52′01″N 78°08′46″E / 9.867°N 78.146°E / 9.867; 78.146
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாமணத்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாமநத்தம்[1]
—  கிராமம்  —
சாமநத்தம்[1]
அமைவிடம்: சாமநத்தம்[1], தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°52′01″N 78°08′46″E / 9.867°N 78.146°E / 9.867; 78.146
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
வட்டம் மதுரை தெற்கு
ஆளுநர் ஆர். என். ரவி[2]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[3]
மாவட்ட ஆட்சியர் கெ. ஜெ. பிரவீன் குமார், இ. ஆ. ப [4]
மக்கள் தொகை 1,929 (2001)
பாலின விகிதம் 1,076 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


சாமநத்தம் (Samanatham) இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்து கிராமத்தின் பெயர் ஆகும்.[5] இக்கிராமம் திருப்பரங்குன்றம் வட்டாரத்தின் கீழ் வருகிறது.[6] சாமநத்தம் என்ற சொல்லுக்கு சமணர்களின் அமைப்பு அல்லது பழக்கம் என்று பொருள் ஆகும்.

வரலாறு

[தொகு]

நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.[7] [8]

அமைவிடம்

[தொகு]

மதுரையில் இருந்து தென்கிழக்காக 7 கி.மீ. தூரத்திலும் திருப்பரங்குன்றம் நகரில் இருந்து கிழக்கே 10 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

சாமநத்தம் ஒரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நகரமாகும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, சாமநத்தம் கிராமத்தின் மக்கள் தொகை 4,477 ஆகும். இம்மக்கள் தொகையில் 2,258 ஆண்களும் 2,219 பெண்களும் இருந்தனர்.

சாமநத்தம் கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 12.66% பேர் 0-6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர். குழந்தைகளின் மக்கள் தொகை 567 ஆகும். மாநில சராசரியான 996-என்பதற்கு எதிராக இங்கு பெண் பாலின விகிதம் 983 ஆக இருந்தது. தமிழ்நாட்டின் மாநில சராசரியான 943 உடன் ஒப்பிடும்போது, ​​இக்கிராமத்தின் குழந்தைப் பாலின விகிதம் சுமார் 1004 ஆக இருந்தது.

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது சாமநத்தம் கிராமத்தில் எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ளது. 2011 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 80.09% ஆக இருந்தபோது, ​​கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 79.85% ஆக இருந்தது. இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 86.58% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 72.97% ஆகவும் இருந்தது.[9]

சாமநத்தம் கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சாதியினர் 11.55% இருந்தனர். சாமநத்தம் கிராமத்தில் தற்போது பட்டியல் பழங்குடியினர் எவரும் இல்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம்: அரசு பதிலளிக்க உத்தரவு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2025/Feb/03/chamanatham-kanmayil-bird-sanctuary-government-ordered-to-respond. பார்த்த நாள்: 28 January 2026. 
  2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  5. "Integrated Management Information System (IMIS) report". Ministry of Drinking Water and Sanitation, Government of India. Archived from the original on 2016-03-04. Retrieved 2013-02-25.
  6. "NREGA Report". Ministry of Rural Development, Government of India. http://nregalndc.nic.in/netnrega/writereaddata/state_out/more_person2920003032_local_1213_110.html. பார்த்த நாள்: 2013-02-25. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் - பெரியபுராணம்
  8. தோற்றவர் கழுவி லேறித் பெரிய புராணம் 2754
  9. "Samanatham Census Town City Population Census 2011-2026 | Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2026-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமநத்தம்&oldid=4455566" இலிருந்து மீள்விக்கப்பட்டது