உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தா சேத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தா சேத்ரி
Shanta Chhetri
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சாந்தா சேத்ரி, புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
19 ஆகத்து 2017 – 18 ஆகத்து 2023
முன்னையவர்சீத்தாராம் யெச்சூரி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[1]
பின்னவர்பிரகாசு சிக் பரைக்கு
தொகுதிமேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 அக்டோபர் 1956 (1956-10-10) (அகவை 68)
குர்சியோங்கு, மேற்கு வங்காளம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு)
துணைவர்மறைந்த தியோ சந்தர கார்க்கி
வாழிடம்(s)16ஏ தோவ்கில் சாலை, குர்சியோங்கு, டார்ச்சிலிங்கு, மேற்கு வங்காளம்
முன்னாள் கல்லூரிஎம்.காம்., 1980 (வடக்கு வங்காள பல்கலைக்கழகம்

சாந்தா சேத்ரி (Shanta Chhetri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று குரிசியோங்கு நகரத்தில் இவர் பிறந்தார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவராக செயல்பட்டார். 2017 ஆம் ஆண்டு சூலை மாதம் 31 ஆம் தேதியன்று மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினராகவும் சாந்தா சேத்ரி உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா_சேத்ரி&oldid=3821328" இலிருந்து மீள்விக்கப்பட்டது