உள்ளடக்கத்துக்குச் செல்

சாதியோ இசுமிருதி சௌதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாதியோ ஸ்மிருதி ஷௌதோ
জাতীয় স্মৃতি সৌধ
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமை
வகைபொது நினைவிடம்
இடம்சாவார் உள் மாவட்டம், வங்காளதேசம்
கட்டுமான ஆரம்பம்1978
நிறைவுற்றது1982
உயரம்
கூரை150 அடிகள் (46 m)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)சையது மைனுல் உசைன்

ஜாதியோ ஸ்மிருதி ஷௌதோ (Jatiyo Sriti Shoudho, வங்காள மொழி: জাতীয় স্মৃতি সৌধ ) அல்லது தேசிய ஈகையர் நினைவிடம் பாக்கித்தானிடமிருந்து பிரிந்து விடுதலைப் பெறக் காரணமாக அமைந்த 1971இல் நடந்த வங்காளதேச விடுதலைப் போரில் உயிர் ஈந்தவர்களின் வீரத்தையும் ஈகையையும் நினைவில் நிறுத்துமாறு கட்டமைக்கப்பட்டுள்ள வங்காளதேசத்தின் தேசிய நினைவுச் சின்னமாகும். இந்த நினைவுச் சின்னம் தலைநகர் டாக்காவிலிருந்து வடமேற்கே ஏறத்தாழ 35 கிமீ தொலைவில் சாவார் உள்மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1] இதனை சையது மைனுல் உசைன் வடிவமைத்துள்ளார்.

History[தொகு]

இடதுபுற காட்சி

இந்த நினைவகத்திற்கான திட்டங்கள் 1976இல் தீட்டப்பட்டன. நினைவகம் அமைப்பதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு சாலைகளும் நிலமும் மேம்படுத்தப்பட்ட பிறகு, தேசிய அளவில் கட்டிட வடிவமைப்பிற்கான போட்டி 1978ஆம் ஆண்டு சூன் மாதம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட 57 வடிவமைப்புகளில் சையது மைனுல் உசைனின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. முதன்மைக் கட்டமைப்பும் செயற்கை ஏரியும் மற்ற வசதிகளும் 1982இல் நிறைவுற்றன. திசம்பர் 16, 1982இல் இது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

படத்தொகுப்பு[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Amin, Md Shahidul; Islam, M Zakiul (2012). "National Martyrs' Memorial". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதியோ_இசுமிருதி_சௌதோ&oldid=3805076" இலிருந்து மீள்விக்கப்பட்டது