சாணவளியுண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாணவளியுண்ணி (Methanotroph) என்பது சாணவளி விரும்பிகளாகும். இவை சாணவளி உட்கொண்டு அனுவெறிகையில் மாற்றி தனக்கான உணவை உற்பத்திச் செய்யும் தனித்துவம் வாய்ந்த பாக்டீரியாக்களாகும். இவைகள் ஒத்தக்கரிமூலவுண்ணி என்னும் நுண்ணுயிரி வகைப்பாட்டிற்குள் அடங்கும். இவை அனுவெறிகையில் சாணவாயுவை உயிர்வளிப்படுத்தி எரிச்சாராயமாக மாற்றுகிறது. இதைச் சிதைக்க சாணவாயு ஒற்றை உயிர்வளியேற்றி (methane monooxygenase) என்னும் நொதியைப் பயன்படுத்துகிறது.

சாணவாயு என்பது உயிர்வளியற்றச் சுற்றுச்சூழலில் ஒரு நிலையான கரிம வளியாகும். இவை நுண்ணுயிரிகளால் சிதைக்கப் படுவதால் இவை தனிம சுழற்சியிலும் உணவு சுழற்சியிலும் இடம்பெறுகின்றன. இவ்வாறு அவை சிதைக்கப் படாமல் வானிற்குத் தப்பிச்செல்லும் போது அவை புவிவெப்ப மடையச் செய்கின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படாமல் தப்பிக்கும் சாணவாயு வானில் பல இன்னல்களை விளைவிக்கின்றன.

இவை இயற்கையில் சில தனிமச்சிதை பாக்டீரியாக்களுடன்]] (Chemolithotrophic) இணைந்து சாணவாயுவை சிதைத்து உண்வுச் சுழற்சியில் அடிப்படை உணவாக்கத்தில் துணைப் புரிகின்றன. இவைகள் பெரும்பாலும் கடற்பகுதிகளிலும் நன்னீர்களிலும், சில வெப்பநீரூற்றுகளிலும் காணப்படுகின்றன.

வரலாறு[தொகு]

இதைச் சிதைப்பதில் சாணவளியுண்ணிகள் பெரும் பங்காற்றுகின்றன. இவ்வாறு சாணவாயு சிதைக்கும் பாக்டீரியாவை முதன்முதலில் 1906ம் ஆண்டு வெளிக்கொணர்ந்தார். இவர் அண்டத்தில் சாண்வாயுவின் அளவைக் குறைக்க நுண்ணுயிரிகள் உதவுகின்றன என விளக்கினார். இவர் முதன்முதலில் அறியப்பட்டு, தனித்து வளர்க்கப்பட்டு இவராலயே பெயரிடப்பட்ட சாணிவளியுண்ணி பாசில்லசு மெத்தானிகசு. இவைகளில் உயிர்வளியின்றியமையா (aerobic) மற்றும் உயிர்வளிதுரந்த/உயிர்வளியற்ற (anaerobic) பாக்டீரியாக்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் பெறிதும் அலசி ஆராயப்பட்டது உயிர்வளியின்றியமையா பாக்டீரியாக்களேயாகும்.

வகைப்பாடு[தொகு]

சாணவாயு பயன்படுத்தும் பாக்டீரியாக்களை ஐந்து பேரினங்களாக வகுக்கின்றனர். இதில் பெரும்பங்காற்றியவர் விட்டன்பெர்ரி என்பவராவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சாணவாயுண்ணிக்களை தனிமைப்படுத்தி வளர்த்து வகைப்பாட்டிற்கு பெறிதும் உதவியுள்ளார். இப்பேரினங்களை இருப்பிரிவுகளுக்குள் பகுக்கின்றனர். அவை வகை 1ல் மெத்திலோமோனாசு மற்றும் மெத்திலோபாக்டர் என்னும் பேரினமும், வகை 2ல் மெத்திலோசிச்டிச் மற்றும் மெத்திலோசைனசு மற்றும் இவையற்று வகை X என மெத்திலோகாக்கசுவை வகுக்கின்றனர்.

குறிப்புகள்[தொகு]

  • இவை உயிரேற்றத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
  • இவை புவிவெப்ப மடைதலைத் தடுக்க பயன்படும் நட்சத்திரத் தகுதிக்கொண்ட் உயிராக ஆராயப்பட்டு வருகிறது.
  • இவை சாணவாயுவை வளிமண்டலத்தில் குறைப்பதிலும் அவைகளைக் கட்டுப்படுத்துவதிலும் பெறிதும் துனை நிற்கின்றன.

காண்க[தொகு]

மேற்கோள்[தொகு]

  • RS Hanson and TE Hanson. (1996). Methanotrophic bacteria. Microbiological Reviews. 60(2):439-471
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாணவளியுண்ணி&oldid=2744676" இலிருந்து மீள்விக்கப்பட்டது