உள்ளடக்கத்துக்குச் செல்

சாணவளியாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாணவளியாக்கிகள் அல்லது சாணவளி உற்பத்திகள் (Methanogen) என்பது நுண்ணுயிரிகளில் ஒரு குழுவாகும். இவைகள் அனுவெறிகையில் உயிர்வளியற்ற நிலையில் சாணவளியை இணைப்பொருட்களாக வெளிவிடுகின்றன. இவை பக்டீரியாவிலிருந்து வேறுபட்ட தொன்மை நுண்ணுயிரிகளில் அடங்கும். இவையே முதன்முதலில் அறியப்பட்ட தொன்மை நுண்ணுயிரிகளாகும்.

இது பெரும்பாலும் நாம் பெரிதும் அறியப்பட்ட மலம்மக்கல் தொட்டி, குப்பைகள் மக்குமிடங்களில் பரவலாக காணப்படுக்கின்றன. இவைகள் நெகிழா உயிர்வளியற்ற வாழிகளாகும். இவைகள் மாந்தன் மற்றும் மாடுகளின் உணவுக்குழாய்களில் வாழ்கின்றன. இவை செரிமானத்திற்குத் துணைப்புரிகின்றன. இவை மனிதனில் குசு எனப்படும் மலக்குடலில் இருந்து மலவாய்/குதம் வழியாக வெளியாகும் கூட்டுவளி ஒரு குறிப்பிடத்தக்க உயிர்வளியாகும். இவை மாடுகளில் இரைப்பைக்குள் தங்கி இவை ஏப்பம் வழியாக வெளியேறுகின்றன. மாடுகளில் சராசரியாக ஒரு நாளில் 500 லிருந்து 600 லிட்டர வரை சாணவளிக்கள் வெளிவருகின்றன.

சாணவளியென்பது பைங்குடில் வளிக்களில் முக்கியமான ஒன்றாகும். இவை புவிவெப்ப மடைதலில் கரிக்காடி வளிக்கு அடுத்தபடியாக உள்ள வளியாகும். இவைகள் பெரும்பாலும் உயிர் அணுவெறிகையால் வெளிவருகின்றன. அதில் பெரும்பங்காற்று பவை இச்சாணவளியாக்கிகளே யாகும். இச்சாணவளியாக்கிகள் உணவு மறுசுழற்சியில் பெரும்பங்காற்றுகின்றன. இவைகள் புவியில் சமநிலை உருவாக பெரிதும் உதவுகின்றன. இச்சாணவளியாக்கி உற்பத்தியில் பெரும்பங்காற்றினாலும் இவ்வளிக்களை கட்டுப்படுத்தும் பெரும்பங்கு மற்றொரு நுண்ணுயிரிக்குழுவான சாணவளியுண்ணிகள் மேற்கொள்கின்றன. இவைகள் சூழ்நிலைச் சமானத்தை பாதுகாக்கின்றன.

பண்புகள்[தொகு]

இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட குறுவினங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை மரபினவழி வகைப்பாட்டியலில் பயன்படுத்தப்படும் மரத்தில் ஒரேக் கிளையின் கீழ்வருவதில்லை. ஆயினும் இவையனைத்தும் தொன்மை நுண்ணுயிரிகளுக்குள் அடங்கும். இவைகளில் பெரும்பாலானவை நெகிழா உயிர்வளியற்ற வாழிகளாகும். இவைகள் உயிர்வளியுள்ள இடங்களில் வாழ இயலாது.

ஆயினும் உயிர்வளியின்றியமையா உயிர்களில் காணப்படும் சூப்பராக்சைடு டிச்மூட்டேசு என்னும் நொதி மெத்தனோசார்சினா பார்க்கெரி என்னும் உயிரிகளில் காணப்படுகின்றன.

இவைகளில் பெரும்பாலும் கோலுயிரிகளாகவும் உருளையுயிரிகளாகவும் காணப்படுகின்றன. ஆனாலும் சிலவற்றில் நிலையுருவமற்ற நிலையும் காணப்படுகின்றன.

இவைகள் உச்சவிரும்பிகள் வகைப்பாட்டுக்குள்ளும் அடங்கும்.

மேற்குறிப்புகள்[தொகு]

  • Thauer, R. K. and Shima, S. (2006). "Biogeochemistry: Methane and microbes". Nature 440 (7086): 878–879. doi:10.1038/440878a. PubMed
  • M.J. Whiticar, et al. (1986). "Biogenic methane formation in marine and freshwater environments: CO2 reduction vs. acetate fermentation — isotope evidence". Geochim. Cosmochim. Acta 50: 393–709. doi:10.1016/0016-7037(86)90346-7

காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாணவளியாக்கி&oldid=2695430" இலிருந்து மீள்விக்கப்பட்டது