சாங்குவாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாங்குவாவ்
Zankhvav
அருகிடம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்சூரத்
அரசு
 • நிர்வாகம்சூரத் மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண் -->394440
தொலை பேசிக் குறியீடு91261-XXX-XXXX
சட்ட மன்றத் தொகுதிபர்தோலி
குடிமை நிர்வாகம்சூரத் மாநகராட்சி

சாங்குவாவ் (Zankhvav) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். சூரத் மாநகராட்சியின் ஒரங்கமாக விளங்கும் இச்சிறு நகரம் ஒரு தொடருந்து நிலையயமாகவும் விளங்குகிறது.[1][2] சூரத் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவும், கோசாம்பா நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் சாங்குவாவ் நகரம் அமைந்திருக்கிறது.

கோசாம்பா-சாங்குவாவ் தொடருந்து பாதையின் முடிவிடமாகவும் சாங்குவாவ் நகரம் இருக்கிறது. இத்தொடருந்து பாதை 1900 ஆம் ஆண்டில் ஒரு குறுகிய வழிப்பாதையாக கெயிக்வாட் வம்சத்தினரால் பரோடா மாநில தொடருந்தாக அமைக்கப்பட்டது.[3] தற்பொழுது இப்பாதை அகலப் பாதை போக்குவரத்தாக மாற்றப்பட்டு இயங்குகிறது.

கோசாம்பா-வேலச்சா-மாங்குரோல்-வாங்கால்- சாங்குவாவ் மாநில நெடுஞ்சாலை எண் 166 சாங்குவாவை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது.

சாங்குவாவின் அஞ்சல் குறியீட்டு எண் 394440.[1]

சாங்குவாவ் நகரில் 1963 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சாந்திநிகேதன் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது[4]. இதைத்தவிர ஒரு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சமூக சுகாதார மையம் முதலியன இவ்வூரில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்குவாவ்&oldid=3243448" இருந்து மீள்விக்கப்பட்டது