சாக்லேட் வெடிகுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு சாக்லேட் வெடிகுண்டு பாணி பட்டாசு. கருப்பு புரோட்ரஷன் என்பது உருகி, இது பற்றவைக்கப்படுகிறது.

சாக்லேட் வெடிகுண்டு (Chocolate bomb) என்பது ஒரு வகையான பட்டாசு ஆகும்.. இது தீபாவளி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட் வெடிகுண்டுகள் வெடிமருந்து துகள்களால் நிரப்பப்பட்ட சிறிய காகித அட்டைப் பெட்டிகளால் ஆனவை.[1] இவற்றின் ஒரு மூலையில் ஒரு திரி செருகப்படுகிறது. பெட்டிகளை இறுக்கமாகச் சணல் சரங்களால் போர்த்தி பின்னர் மூன்று நாட்கள் வெயிலில் காயவைக்க வேண்டும். இதன் பிறகு இவை வண்ணமயமான அலுமினியத் தகட்டுடன் மூடப்படும். இவை சாக்லேட்டுகளை ஒத்திருப்பதால் சாக்லேட் வெடிகுண்டுகள் எனப்படுகின்றன. 1990களில் கொல்கத்தாவில் பூரிமா வகை சாக்லேட் குண்டுகள் மிகவும் பிரபலமாக இருந்தன.[2] மேற்கு வங்கத்தில் இந்த பட்டாசு பயனடுத்துவது சட்டவிரோதமான செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது.[3]

ஒரு பெட்டியில் சில சாக்லேட் குண்டுகள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ghatak, Shubhashish (14 October 2014). "'গরিবের বাজি' বলে দেদার তৈরী হচ্ছে চকোলেট বোমা" (in Bengali). Anandabazar Patrika (Kolkata) இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141025010419/http://www.anandabazar.com/nature/%E0%A6%97%E0%A6%B0-%E0%A6%AC-%E0%A6%B0-%E0%A6%AC-%E0%A6%9C-%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%A6-%E0%A6%A6-%E0%A6%B0-%E0%A6%A4-%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%9A-%E0%A6%9B-%E0%A6%9A%E0%A6%95-%E0%A6%B2-%E0%A6%9F-%E0%A6%AC-%E0%A6%AE-1.76986. பார்த்த நாள்: 25 October 2014. 
  2. Sen, Zinia (23 October 2014). "City of sound & fury". The Times Of India (Kolkata). http://timesofindia.indiatimes.com/city/kolkata/City-of-sound-fury/articleshow/44915951.cms. பார்த்த நாள்: 25 October 2014. 
  3. Dam, Mohona (3 December 2009). "Govt wants banned crackers out of Bengal before New Year celebrations". The Indian Express. http://archive.indianexpress.com/news/govt-wants-banned-crackers-out-of-bengal-before-new-year-celebrations/549399/. பார்த்த நாள்: 25 October 2014. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்லேட்_வெடிகுண்டு&oldid=3266169" இலிருந்து மீள்விக்கப்பட்டது