சாகிதா குவாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாகிதா குவாசி (Shahida Qazi) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் கல்வியாளர் ஆவார்.[1] பாக்கித்தான் நாட்டில் ஒரு நிருபராக அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவரேயாவார்.[2] சாகிதா குவாசி 1944 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1963 ஆம் ஆண்டில் கராச்சி பல்கலைக்கழகத்தில் அப்போது புதிதாக நிறுவப்பட்ட இதழியல் துறையில் பதிவுசெய்யப்பட்ட நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண்மணி சாகிதா குவாசி ஆவார்.[2] குவாசி 1966 ஆம் ஆண்டில் டான் செய்திகளில் சேர்ந்தார். இதன்மூலம் பாக்கித்தானில் முதல் பெண் நிருபர் என்ற சிறப்பைப் பெற்றார். பின்னர் 18 வருடங்கள் பாக்கித்தான் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[3][2] கராச்சி பல்கலைக்கழகம் மற்றும் முகமது அலி சின்னா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புத் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.[4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிதா_குவாசி&oldid=3749358" இருந்து மீள்விக்கப்பட்டது