உள்ளடக்கத்துக்குச் செல்

சவுரியா சவுகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவுரியா சவுகான்
பிறப்பு7 August[1]
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம்
(தற்போதைய தெலங்காணா), இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சவுரியா குமார் ராஜ்புத், நீலிமா சவுகான்
பணிவிளம்பர நடிகை, திரைப்பட நடிகை
அறியப்படுவதுஇந்திய தொலைக்காட்சி நடிகர், தொகுப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ரிஷி சவுகான்

சவுரியா சவுகான் (பிறப்பு ஆகஸ்ட் 7) இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், திரைப்பட நடிகையுமாவார்.[1] 2006 ஆம் ஆண்டில் கிங்ஃபிஷர் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நாட்காட்டியில் இடம்பெற்று பிரபலமடைந்த இவர், க்ரிஷ் 3 திரைப்படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரத்திற்கு எதிர் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சவுரியா சவுகான் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திரக் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி நாட்களிலேயே சிறந்த உடற்பயிற்சி வல்லுநராக இருந்த சவுரியா, உடற்பயிற்சியை மட்டுமல்லாமல் பாடல், நடனம், விளையாட்டு போன்ற பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி மற்றும் உடற்பயிற்சி விளையாட்டுகளில் தனது பள்ளியின் பிரதிநிதியாக பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.

வாழ்க்கைப்பாதை

[தொகு]

தொழில்முறை புகைப்படக்கலைஞரான அதுல் கஸ்பேகர் சவுரியாவின் திறமையையும், அழகையும் கண்டு, 2006 ஆம் ஆண்டில் கிங்ஃபிஷர் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நீச்சலுடை நாட்காட்டியில் அமைந்துள்ள இவரது புகைப்படங்களை எடுத்துள்ளார்.[3]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

இந்தி மொழி திரைப்படமான கியோன் கி-யில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ள இவர், மும்பை சல்சா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார். சரி யா தவறு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தாலும், பாத்திர வடிவமைப்பு பிடிக்காத காரணத்தினால் அத்திரைப்படத்திலிருந்து வெளியேறியுள்ளார். ராகேஷ் ரோஷன் தயாரித்த கிரிஷ் 3 திரைப்படத்தில் முக்கிய எதிரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சவுரியா, ரிஷி சவுஹானை மணந்துள்ளார்.[4]

திரைப்படவியல்

[தொகு]
  • கியோன் கி (சிறப்புதோற்றம்)
  • மும்பை சல்சா
  • ஹார்ன் ஓகே ப்ளீஸ்
  • சத்தா அடா
  • க்ரிஷ் 3

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Meet Shaurya Chauhan, the Hottie Villain of Krrish 3". பார்க்கப்பட்ட நாள் 23 October 2013.
  2. Roshans find a hottie for Krrish – Times Of India. (13 December 2011). Retrieved 2013-08-05.
  3. Caught in the act! – Times Of India. (22 October 2008). Retrieved 2013-08-05.
  4. "Shaurya Chauhan Biography- Koimoi". பார்க்கப்பட்ட நாள் 23 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுரியா_சவுகான்&oldid=4131113" இலிருந்து மீள்விக்கப்பட்டது