சவர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவர்மா
Shawarma
வகைஇறைச்சி
தொடங்கிய இடம்சிரியா, உதுமானியப் பேரரசு[1][2][3]
தொடர்புடைய சமையல் வகைகள்துருக்கி, லெவண்ட், மத்திய கிழக்கு
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்இறைச்சி: ஆடு, கோழி, மாடு, வான்கோழி
மரக்கறி, ஊறுகாய்
இதே போன்ற உணவுகள்டொனர் கேபாப்

சவர்மா (Shawarma, அரபு மொழி: شاورما‎) என்பது ஒரு பிரபலமான லெவண்ட்டீனிய[4] பிராந்திய உணவாகும், இது இறைச்சியை மெல்லிய துண்டுகளாக வெட்டி, கூம்பு போன்ற வடிவத்தில் ஒரு கம்பியில் குத்தி அடுக்கி, மெதுவாகத் சுழலக்கூடிய அச்சில் செங்குத்தாக நிறுத்தப்பட்டு சுடப்படுகிறது. முதலில் ஆட்டிறைச்சியால் தயாரிக்கப்பட்டது, இப்போது கோழி, வான்கோழி, மாட்டிறைச்சி ஆகியவற்றால் செய்யப்படுகிறது.[5][6][1] சமைத்த இறைச்சிக் கூம்பின் மேற்பரப்பில் இருந்து மெல்லிய துண்டுகள் தொடர்ந்து சுழலும் போது அறுத்தெடுக்கப்படுகின்றது.[7][8] ஷவர்மா உலகின் மிகவும் பிரபலமான சாலையோர உணவுகளில் ஒன்றாகும், குறிப்பாக எகிப்து, லெவன்ட், காகசஸ், அரேபிய தீபகற்பம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக உள்ளது.[9][10]

சொற்பிறப்பியல்[தொகு]

ஷவர்மா என்பது துருக்கிய செவிர்மியின் என்ற சொல்லின் அரேபிய மொழிபெயர்ப்பாகும்.[10]

வரலாறு[தொகு]

லெபனானில் ஷவர்மா, 1950

கிடைமட்டத்தில் இறைச்சியை சுட்டெடுப்பது ஒரு பழங்கால வரலாற்றைக் கொண்டிருந்தாலும், சவர்மா நுட்பம் — இறைச்சித் துண்டுகளின் செங்குத்து அடுக்கை சுட்டு, சமைக்கும்போது அதை வெட்டுவது — முதன்முதலில் 19 ஆம் நூற்றாண்டின் ஒட்டோமான் பேரரசில், அதாவது தற்போதய துருக்கியில் தோன்றியது. டோனர் கபாபின் வடிவம்.[11] கிரேக்க கைரோஸ் மற்றும் சவர்மா இரண்டும் இதிலிருந்து பெறப்பட்டவை.[1][2] சவர்மா, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமகால மெக்சிகன் உணவான டகோஸ் அல் பாஸ்டரின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது, அது லெபனான் குடியேறியவர்களால் அங்கு கொண்டு வரப்பட்டது.[2][12]

தயாரித்தல்[தொகு]

சவர்மா சுவையூட்டப்பட்ட ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி அல்லது வான்கோழி இறைச்சி ஆகியவற்றின் மெல்லிய துண்டுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இறைச்சி துண்டுகள் ஒரு கம்பியில் சுமார் 60 செ.மி (20 அங்) உயரம் குத்தி வைத்து அடுக்கப்படுகிறது . கூடுதல் சுவையூட்ட ,இறைச்சி அடுக்கில் கொழுப்புத் துண்டுகள் சேர்க்கப்படலாம். இறைச்சியின் அடுக்கை மின்சாரம் அல்லது எரிவாயு மூலம் எரியும் வெப்ப உமிழும் கருவி முன்னால் சுழன்று, இறைச்சியின் வெளிப்புற அடுக்கை தொடர்ந்து வேகவைக்கிறது. பொதுவாக ஒரு நீண்ட தட்டையான கத்தியைக் கொண்டு சுழலும் சவர்மா அடுக்கு வெட்டி எடுக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.[1]

மசாலாப் பொருட்களில் சீரகம், ஏலக்காய், இலவங்கப்பட்டை, மஞ்சள் , மிளகு, மற்றும் சில பகுதிகளில் பஹரத் ஆகியவை சேர்க்கப்படலாம்.[12][3] சவர்மா பொதுவாக பிடா அல்லது லஃபா போன்ற தட்டையான ரொட்டியில் சாண்ட்விச் போன்று பரிமாறப்படுகிறது.[1] மத்திய கிழக்கில், கோழி இறைச்சி சவர்மா பொதுவாக பூண்டு சுவைச்சாறு, பொரியல் மற்றும் ஊறுகாய்களுடன் பரிமாறப்படுகிறது. சிரியா மற்றும் லெபனானில், சாண்ட்விச்சுடன் வழங்கப்படும் பூண்டு சுவைச்சாறு இறைச்சியைப் பொறுத்தது. Toum அல்லது Toumie சுவைச்சாறு என்பது பூண்டு, தாவர எண்ணெய், எலுமிச்சை மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு அல்லது மாச்சத்து ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது, மேலும் இது பொதுவாக கோழி இறைச்சி ஷவர்மாவுடன் பரிமாறப்படுகிறது. டாரேட்டர் சுவைச்சாறு (சாஸ்) பூண்டு, தஹினி சுவைச்சாறு, எலுமிச்சை மற்றும் தண்ணீரிலிருந்து தயாரிக்கப்படுகிறது, மேலும் மாட்டிறைச்சி சவர்மாவுடன் பரிமாறப்படுகிறது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 Marks, Gil. Encyclopedia of Jewish Food. https://books.google.com/books?id=gFK_yx7Ps7cC&pg=PT1682. 
 2. 2.0 2.1 2.2 Prichep, Deena; Estrin, Daniel (2015-05-07). "Thank the Ottoman Empire for the taco al pastor". PRI. பார்க்கப்பட்ட நாள் 19 March 2017.
 3. 3.0 3.1 Salloum, Habeeb; Lim, Suan L. (2010). The Arabian Nights Cookbook: From Lamb Kebabs to Baba Ghanouj, Delicious Homestyle Arabian Cooking. Tokyo: Tuttle Pub. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781462905249. இணையக் கணினி நூலக மையம்:782879761. https://books.google.com/books?id=v5TTAgAAQBAJ&pg=PA66. 
 4. Philip Mattar. Encyclopedia of the Modern Middle East & North Africa: D-K. https://books.google.com/books?id=yqgUAQAAIAAJ&q=%22Shawarma+is+a+popular+Levantine+Arab+specialty.%22. 
 5. Food Cultures of the World Encyclopedia. 2011. https://books.google.com/books?id=NTo6c_PJWRgC&q=shawarma. 
 6. Davidson, Alan. The Oxford Companion to Food. https://books.google.com/books?id=bIIeBQAAQBAJ&pg=PA259. 
 7. Mattar, Philip. Encyclopedia of the Modern Middle East & North Africa: D-K. https://books.google.com/books?id=yqgUAQAAIAAJ&q=%22Shawarma+is+a+popular+Levantine+Arab+specialty.%22. 
 8. La Boone, III, John A.. Around the World of Food: Adventures in Culinary History. https://books.google.com/books?id=Ier6CmQ-e-kC&q=Shawarma+arab&pg=PA115. 
 9. Kraig, Bruce. Street Food Around the World: An Encyclopedia of Food and Culture. 
 10. 10.0 10.1 Al Khan, Mohammed N. (31 July 2009). "Shawarma: the Arabic fast food". Gulf News.
 11. Eberhard Seidel-Pielen (May 10, 1996). "Döner-Fieber sogar in Hoyerswerda" [Doner fever even in Hoyerswerda]. ZEIT ONLINE (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் May 6, 2016. Neither in the written recipes of the medieval Arab cuisine nor in the Turkish cookbooks from the first half of the 19th century are there any indications. According to research carried out by the Turkish master chef Rennan Yaman, who lives in Berlin, the doner kebab is an amazingly young creation of Ottoman cuisine. (Quote translated from the German)
 12. 12.0 12.1 Guttman (2017-05-01). "How to Make Shawarma Like an Israeli". https://www.haaretz.com/food/.premium-how-to-make-shawarma-like-an-israeli-1.5467110. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவர்மா&oldid=3647587" இலிருந்து மீள்விக்கப்பட்டது