உள்ளடக்கத்துக்குச் செல்

சலேசிய சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் போஸ்கோவின் சலேசியன் சபை
சுருக்கம்S.D.B., ச.ச (சலேசிய சபை)
உருவாக்கம்திசம்பர் 18, 1859 (1859-12-18)
நிறுவனர்ஜான் போஸ்கோ
வகைகத்தோலிக்க துறவற சபை (திரு ஆட்சிப்பீட அதிகாரத்துக்கு உட்பட்ட துறவறசபை )
நோக்கம்திருத்தூதுப்பணிகள்
தலைமையகம்உரோமை
உறுப்பினர்கள் (2014)
15,298 (துறவறப்புகுநிலையினர் மற்றும் ஆயர்களை நீக்கி கணக்கிட்டால் 14,731)
தலைமை அதிபர்
அரு. ஆஞ்சல் ஃபெர்னான்டஸ் அர்டைம்
தலைமை அதிபரின் பதில் ஆள்
அரு. பிரான்செஸ்கோ கிரேதா
மைய அமைப்பு
தலைமை அதிபர் மற்றும் ஆட்சிக்குழு
வலைத்தளம்sdb.org/en
முன்னாள் பெயர்
புனித பிரான்சிசு டி சேலசின் சபை

புனித ஜான் போஸ்கோவின் சலேசிய சபை (அல்லது சலேசியன் சபை, அதிகாரப்பூர்வமாக ஏற்க்கப்பட்டதன்படி புனித பிரான்சிசு டி சேலசின் சபை) என்பது கத்தோலிக்க திருச்சபையின் துறவறச் சபையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனித ஜான் போஸ்கோ தொழிற்புரட்சியின்போது பாதிக்கப்பட்ட இளையோர் மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் நோக்குடன் இச்சபையினைத் தொடங்கினார். ஜெனீவா நகரின் ஆயராக இருந்த புனித பிரான்சிசு டி சேலசின் பெயரால் இச்சபையினை சலேசிய சபை என அவர் அழைத்தார். அவரின் இறப்புக்குப்பின்பு இதன் பெயர் ஜான் போஸ்கோவின் சலேசியன் சபை என மாற்றப்பட்டது. இச்சபையின் குறிக்கோளுரை ஆன்மாக்களை எனக்குத் தாரும்; மற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும்; (இலத்தீன்: DA MIHI ANIMAS CÆTERA TOLLE) என்பதாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Salesian Society". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2015-01-16. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலேசிய_சபை&oldid=3002753" இலிருந்து மீள்விக்கப்பட்டது