சலாம் சினிமா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சலாம் சினிமா
இயக்கம்மோசன் மக்மால்பஃப்
தயாரிப்புலவசானி, அப்பாஸ் ராண்ட்ஜ்பார்
கதைமோசன் மக்மால்பஃப்
ஒளிப்பதிவுமக்மூத் கலாரி
படத்தொகுப்புமோசன் மக்மால்பஃப்
வெளியீடுஏப்ரல் 14, 1995
ஓட்டம்75 நிமிடங்கள்
நாடுஈரான்
மொழிபாரசீக மொழி

சலாம் சினிமா (பாரசீக மொழி: Salaam Cinema‎) என்பது பாரசீக மொழித் திரைப்படம் ஆகும். இதை ஈரானிய இயக்குனர் மோசன் மக்மால்பஃப் இயக்கினார். இத்திரைப்படம் ஹலோ சினிமா (Hello Cinema) எனும் ஆங்கிலப் பெயரில் வெளியானது. இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தியதி 1995 ஆம் ஆண்டு வெளியானது. கான்ஸ் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.[1] இத்திரைப்படம் உலகில் திரைப்படம் தோன்றி 100 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. முதல் நகரும் கேளிக்கைத் திரைப்படம் 1885 ஆம் ஆண்டு தயாரித்து திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தைப் படமாக்குவதற்கு 100 நடிகர்கள் தேவைப்பட்டதால் அதற்காக மோசன் மக்மால்பஃப் பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தார். மக்மால்பஃப் திரைப்படத்தில் நடிக்கும் ஆவலில் ஆயிரக்கனக்கானோர் திரண்டிருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

  • மொக்தாரியன் (M. H. Mokhtarian)
  • மிர்ஹாதி தேயிபி (Mirhadi Tayebi)
  • அஸாதே ஸாங்கானேக் (Azadeh Zanganeh)
  • மொஹர்ராம் ஸாய்னால்ஸாதே (Moharram Zaynalzadeh)

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Festival de Cannes: Hello Cinema". festival-cannes.com. பார்த்த நாள் 2009-09-07.