உள்ளடக்கத்துக்குச் செல்

சலம் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலம்
பிறப்பு(1929-05-18)மே 18, 1929
பாலகொல்லு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்புமே 4, 1989(1989-05-04) (அகவை 59)
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1953-1986
வாழ்க்கைத்
துணை
இரமண குமாரி
(இறப்பு 1964)
சாரதா
(திருமணம்.1972; மணமுறிவு.1984)
பிள்ளைகள்3

சலம் (இயற்பெயர்:சிம்காசலம் கொரடா ) (18 மே 1929 – 4 மே 1989) இந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களிலும், தெலுங்கு நாடகங்களிலும் இவரது படைப்புகளுக்குப் பெயர் பெற்றவர்.[1] 1971 இல் இவர் 19 வது தேசிய திரைப்பட விருது வென்ற மட்டிலோ மாணிக்யம் என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தயாரித்து நடித்திருந்தார்.[2] 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில், சலம் ஏறத்தாழ 150 படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இரமணகுமாரியை மணந்த சலம், தனது பெயரை இரமணா சலம் என மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரமண குமாரி 1964இல் தீ விபத்தில் இறந்தார். சலம் பின்னர் [4] 1972 இல் தண்டுருலு கொடுகுலு என்ற தனது முதல் படத்தில் அவருடன் நடித்த ஊர்வசி சாரதாவை மணந்தார். பின்னர் இவர்கள் 1984 இல் விவாகரத்து செய்தனர் [5]

இறப்பு

[தொகு]

1989 மே 4 அன்று சலம் இறந்தார். மதுவுக்கு அடிமையானதால், இறுதி நாட்களில் மன உளைச்சலுக்கு ஆளானார்.

தயாரிப்பாளர்

[தொகு]
  • சம்பராலா ராம்பாபு (1970)
  • மட்டிலோ மாணிக்யம் (1971)
  • பெல்லி சேசி சூப்பிஸ்டாம் (1983)

விருதுகள்

[தொகு]
தேசிய திரைப்பட விருதுகள்

தெலுங்கில் சிறந்த திரைப்படம் (தயாரிப்பாளர்) மட்டிலோ மாணிக்யம்[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Narasimham, M. L. (26 June 2017). "Downpour at the turnstile". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 18 June 2018.
  2. "National Film Awards (1971)". gomolo.com.
  3. "Tollywood most reputed producer Chalam profile and film facts". nettv4u.
  4. "Sharada goes down the memory lane!". பார்க்கப்பட்ட நாள் 18 June 2018.
  5. "Telugu Actors Whose Marriage Ended With Divorce!". பார்க்கப்பட்ட நாள் 18 June 2018.
  6. "National Film Awards, India (1972)". IMDb.
  7. "National Film Awards - 1972". Archived from the original on 4 May 2018. பார்க்கப்பட்ட நாள் 4 May 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலம்_(நடிகர்)&oldid=3824735" இலிருந்து மீள்விக்கப்பட்டது