சற்சொரூபவதி நாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சற்சொரூபவதி நாதன்

சற்சொரூபவதி நாதன் (மார்ச் 6, 1937 - மே 4, 2017)[1] இலங்கையில் 40 ஆண்டு காலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கியவர்.

கல்வி[தொகு]

ஆரம்பக் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பெற்று அறிவியல் பட்டதாரியானார். பின்னர் பெளத்த மகளிர் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியையாக பணியாற்றினார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

ஒலிபரப்புத்துறை[தொகு]

1965ல் ஒலிபரப்புத்துறையில் இணைந்து கொண்டு அறிவிப்பாளரானார். 1979 இல் முதலாம் தர செய்தி அறிவிப்பாளரானார்.[2] பின்னர் ஆங்கில சேவையின் பதில் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும், செய்தி ஆசிரியராகவும், கல்விச் சேவையில் முறைசாராக் கல்வி நிகழ்ச்சிப் பொறுப்பாளராகவும் பல பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[2] நாடகத்துறை, பூவையர் பூங்கா, பாடசாலை மாணவர் கல்வி நிகழ்ச்சி என்பனவற்றோடு, 'கலைக்கோலம்" சஞ்சிகை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். பல வானொலி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.[2]

விருதுகள்[தொகு]

  • ஜவகர்லால் நேரு விருது (1958)
  • சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது (1995)
  • ஒலிபரப்பாளருக்கான 'உண்டா' விருது (1992)[2]
  • இந்து கலாசார அமைப்பின் தொடர்பியல் வித்தகர் விருது (1993)
  • வானொலி பவள விருது
  • வாழ்நாள் சாதனையாளர் விருது
  • தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தேசிய விருது
  • யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சகலகலாவித்தகி விருது
  • கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சான்றோர் விருது (2012)

சமூகப் பணிகள்[தொகு]

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக இருந்தார்.

மறைவு[தொகு]

சற்சொரூபவதி நாதன் மே 4, 2017 அன்று தனது 80 ஆவது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மூத்த அறிவிப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார்". tamil.adaderana.lk. பார்க்கப்பட்ட நாள் 4-05-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பவளவிழா சிறப்பு மலர் 2000. 2000. பக். pak. 32. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2000. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சற்சொரூபவதி_நாதன்&oldid=2279274" இலிருந்து மீள்விக்கப்பட்டது