சர்வ தர்ம சம பவ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வ தர்ம சம பவ (Sarva Dharma Sama Bhava) என்பது மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட கருத்தாகும். இது, அனைத்து சமயங்களும் பின்பற்றும் வழிகளின் முடிவு ஒன்றாகவே உள்ளது என்ற சமய சமத்துவத்தைக் குறிக்கிறது.[1]

இச் சொற்றொடரை முதல் முதலில் 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தனது இந்து, முசுலிம் தொண்டர்களின் தகவல் தொடர்புகளில் பிளவினைத் தணிக்கப் பயன்படுத்தினார்.[2][3] பல்வேறு சாதியையும் இனங்களையும் இணைத்து மிகப்பெரிய எதிர்-காலனித்துவ இயக்கத்தை காந்தி உருவாக்க, இக்கருத்தானது பெரிதும் உதவியது.[4][5]

இது, அரசையும் சமயத்தையும் வேறுபடுத்தாமல் அனைத்து சமயங்களையும் அரவணைத்துச் செல்லும் இந்திய அரசின் சமயச்சார்பற்ற கோட்பாட்டின் முக்கியமான கருத்தாகவுள்ளது.

சர்வ தர்ம சம பவ என்பது, "அனைத்து தர்மங்களும்/நம்பிக்கைகளும் சாத்தியமானவையே" என்ற நேரடியான பொருளைத் தந்தாலும், பெரும்பாலும் சமயக் கண்ணோட்டத்தில் "அனைத்து சமயங்களும் ஒன்றே" அல்லது "அனைத்துப் வழிகளும் ஒரே இலக்கை நோக்கியே வழிகாட்டுகின்றன" என்றே மொழிபெயர்க்கப்படுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Haynes, Jeffrey (2020). Peace, Politics, and Religion. MDPI AG. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-03936-664-4.
  2. Rakhit, Maanoj (29 July 2013). RKM Propagating the Opposite of What Vivekananda and Ramakrishna Had Said: Call to the Rank and File at RKM! Stand Up and Uphold the Truth. Maanoj Rakhit. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189746490.
  3. Losonczi, Peter; Van Herck, Walter (2017). Secularism, Religion, and Politics: India and Europe. Routledge. p. 33.
  4. Smith, Donald E (2011). India as a Secular State. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781178595253.
  5. Larson, Gerald James (2001). Religion and Personal Law in Secular India: A Call to Judgment. Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-33990-1.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வ_தர்ம_சம_பவ&oldid=3913651" இலிருந்து மீள்விக்கப்பட்டது