சர்தார் குலாம் அப்பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தார் குலாம் அப்பாசு
Sardar Ghulam Abbas
பஞ்சாப் மாகாண சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1985–1988
தொகுதிபி.பி-12 சீலம்-1
பதவியில்
1993–1996
தொகுதிபி.பி-18 சக்வால்-1
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசக்வால்
தேசியம்பாக்கித்தானியர்
அரசியல் கட்சிபாக்கித்தான் தெக்ரீக்-இ-இன்சாஃப் கட்சி
உறவுகள்சர்தார் அஃப்தாப் அக்பர் கான் (மருமகன்)[1]

சர்தார் குலாம் அப்பாசு (Sardar Ghulam Abbas) பாக்கித்தான் நாட்டு அரசியல்வாதி ஆவார். 1985 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை இவர் பஞ்சாபின் மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், பின்னர் மீண்டும் 1993 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை இப்பதவியில் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1985 ஆம் ஆண்டு பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பிபி-12 - சீலம் தொகுதியில் இருந்து பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3]

1993 ஆம் ஆண்டு நடைபெற்ற பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பிபி-18 - சக்வால் தொகுதியில் இருந்து பாக்கித்தான் மக்கள் கட்சியின் வேட்பாளராக பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] [3]

2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர் பாக்கித்தான் தெக்ரீக்-இ-இன்சாஃப் கட்சியில் சேர்ந்தார், ஆனால் பின்னர் 2012 ஆம் ஆண்டில் இவர் இம்ரான் கானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இக்கட்சியை விட்டு வெளியேறினார். [5]

2016 ஆம் ஆண்டில், இவர் பாக்கித்தான் முசுலீம் லீக் (நவாசு) கட்சியில் சேர்ந்தார், ஆனால் தேர்தலுக்கு முன்பு பாக்கித்தான் தெக்ரீக்-இ-இன்சாஃப் கட்சியில் சேர 2018 ஆம் ஆண்டில் விலகினார். [5]

2018 ஆம் ஆண்டில் இவர் மீண்டும் பாக்கித்தான் தெக்ரீக்-இ-இன்சாஃப் கட்சியில் இணைந்தார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PTI fails to stay true to its slogan of 'change'". 17 July 2018.
  2. "Previous Assemblies". www.pap.gov.pk.
  3. 3.0 3.1 3.2 Dhakku, Nabeel Anwar (16 May 2018). "Influential politician Sardar Ghulam Abbas quits PML-N over ex-PM's interview".
  4. "Previous Assemblies". www.pap.gov.pk.
  5. 5.0 5.1 Dhakku, Nabeel Anwar (21 May 2018). "Chakwal's Sardar Ghulam Abbas may rejoin PTI".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்தார்_குலாம்_அப்பாசு&oldid=3749101" இலிருந்து மீள்விக்கப்பட்டது