சரணம் கச்சாமி
சரணம் கச்சாமி | |
---|---|
இயக்கம் | பிரேம் ராசு |
தயாரிப்பு | பொம்மகு முரளி |
கதை | பொம்மகு முரளி |
இசை | இரவி கல்யாண் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கல்யாண் சமி |
விநியோகம் | பொம்மகு திரைப்பட விற்பனை உரிமையாளர்கள் |
வெளியீடு | 7 ஏப்ரல் 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
சரணம் கச்சாமி (Saranam Gacchami) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான, தெலுங்கு மொழி சண்டை-காதல் திரைப்படமாகும். இது இந்தியாவில் இட ஒதுக்கீடு என்ற முக்கியமான சமுதாய, அரசு, அரசியல் கொள்கையை கையாள்கிறது. இப்படத்தில் நவீன் சஞ்சய், தனிஷ்க் திவாரி, போசானி கிருஷ்ண முரளி, ஜெயபிரகாஷ் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இதை இயக்கியவர் பிரேம் ராஜ். பொம்மகு கிரியேசன்சு வணிக அமைப்பு வழியே முரளி பொம்மகு, இப்படத்தை தயாரித்து எழுதியுள்ளார். ஜனவரி 2017 இல், இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் "பொது ஒழுங்கை பாதிக்கும் மற்றும் அமைதியை சீர்குலைக்கும்" என்ற அடிப்படையில் படத்திற்கான சான்றிதழை மறுத்தது. [1]
திரைக்களம்
[தொகு]மானவ், கதாநாயகன், இடஒதுக்கீட்டுக் கொள்கைகள், அவை செயல்படுத்தப்படுவதை பாதிக்கும் காரணிகள் மற்றும் அவற்றின் விளைவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு பத்திரிகை அறிஞர். அவர்களுக்காக முன்மொழியப்பட்ட விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் அவலநிலை விரும்பிய பலனைத் தரவில்லை என்பதை அவர் கவனிக்க நேர்கிறது. எனவே, அவரது வழிகாட்டுதலுடன் தடைகள் என்ன என்பதையும், விரும்பிய மாற்றங்களை எவ்வாறு பெறுவது என்பதையும் அடித்தளமாகக் கொண்டு திரைப்படத்தின் மற்ற பகுதிகளை உருவாக்குகிறார்.
நடிகர்கள்
[தொகு]- மானவ்வாக நவீன் சஞ்சய்
- தனிசுக் திவாரி
- செய பிரகாசு ரெட்டி
- பருச்சுரி வெங்கடேசுவர ராவ்
- போசானி கிருஷ்ண முரளி
- சுதா
- முரளி பொம்மக்கு
- ஆர்.கிருஷ்ணய்யர் (எம்எல்ஏ)
- தேசபதி சிறீனிவாசு
- ஒய். காசி விஸ்வநாத்
- சத்திய கிருஷ்ணன்
ஒலிப்பதிவு
[தொகு]இரவி கல்யாண் இசையமைத்த இப்படத்திற்கு, பொம்மாகு மியூசிக் கம்பெனியால் வெளியிடப்பட்டது.
எஸ். எண் | தலைப்பு | பாடகர்(கள்) |
---|---|---|
1 | "தகத் தகன்" | கைலாசு கேர் |
2 | "நகுமோமு நமஹ" | TBA |
3 | "ருமல் ரூமல்" | ரேவந்த், திவ்யா திவாகர் |
4 | "வேல ஏலா" | தனுஞ்சய், சுனிதா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CBFC denies certification to Telugu film on caste-based quota, says it may 'disrupt peace'". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 26 January 2017. http://www.hindustantimes.com/india-news/cbfc-denies-certification-to-telugu-film-on-caste-based-quota-says-it-may-disrupt-peace/story-B1l2YMzSpPovCquqdFkzTL.html. பார்த்த நாள்: 29 May 2017.
வெளியிணைப்புகள்
[தொகு]- தெலுங்கு பட மதிப்பீடு
- ஐ. எம். டி. பி இணையத்தளம் என்ற வணிகத் தளத்தில் (imdb) காணலாம்.