சரசுவதி பிரதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரசுவதி பிரதான்
Saraswati Pradhan
சரசுவதி பிரதான் உருவப்படம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒடிசா மாநிலங்களவை
பதவியில்
1972–1978
தொகுதிஒடிசா
உறுப்பினர் ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1961–1971
முன்னையவர்நடபர் பாஞ்சோர்
பின்னவர்நடபர் பாஞ்சோர்
தொகுதிபட்லீ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 மே 1925 (1925-05-30) (அகவை 98)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்துரியோதன் பிரதான்
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் 2 மகள்கள்

சரசுவதி பிரதான் (Saraswati Pradhan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1925 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாட்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஒடிசாவின் மூன்றாவது சட்டமன்றத்தில் பணியாற்றினார்.[1][2][3] 2018 ஆம் ஆண்டு தரவுகளின்படி சரசுவதி பிரதான் புவனேசுவரத்தில் வசித்து வந்தார். இவரது தந்தையின் பெயர் மதன் மோகன் பிரதான் என்றும் இவரது கணவர் பெயர் துரியோ பிரதான் என்றும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List Of Rajyasabha Members". Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
  2. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
  3. Dr. Smita Nayak (2016-03-01). Whither Women: A Shift from Endowment to Empowerment. EduPedia Publications (P) Ltd. பக். 159–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5237-2411-6. https://books.google.com/books?id=2rvTCwAAQBAJ&pg=PA159. பார்த்த நாள்: 13 June 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசுவதி_பிரதான்&oldid=3799666" இலிருந்து மீள்விக்கப்பட்டது