உள்ளடக்கத்துக்குச் செல்

சரசுவதி அந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரசுவதி அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். கம்பரின் ஒன்பது படைப்புகளுள் ஒன்றான இந்நூல் அந்தாதி சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் பாட்டுடைத் தலைவி சரசுவதி எனப்படும் கலைமகள். காப்புப் பாடல் தவிர்த்து இதில் முப்பது பாக்கள் உள்ளன. கம்பர் எழுதிய மற்றொரு அந்தாதி நூல் சடகோபர் அந்தாதி.

சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, ஏர் எழுபது என்னும் மூன்று சிற்றிலக்கியங்களையும் பாடியவர் 9 ஆம் நூற்றாண்டில் இராமாயணம் பாடிய கம்பர் அல்லர். 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் கம்பர் என்று மு. அருணாசலம் குறிப்பிடுகிறார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ் இலக்கிய வரலாறு, 12 ஆம் நூற்றாண்டு, பாகம் 2, பக்கம் 277
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசுவதி_அந்தாதி&oldid=4448583" இலிருந்து மீள்விக்கப்பட்டது