சடகோபர் அந்தாதி
தோற்றம்
சடகோபர் அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். கம்பரின் ஒன்பது படைப்புகளுள் ஒன்றான இந்நூல் அந்தாதி சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் பாட்டுடைத் தலைவர் சடகோபர் என அழைக்கப்பட்ட நம்மாழ்வார். சிறப்புப் பாயிரம் தவிர்த்து இதில் நூறு பாக்கள் உள்ளன. கம்பர் எழுதிய மற்றொரு அந்தாதி நூல் சரசுவதி அந்தாதி.
சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, ஏர் எழுபது என்னும் மூன்று சிற்றிலக்கியங்களையும் பாடியவர் 9 ஆம் நூற்றாண்டில் இராமாயணம் பாடிய கம்பர் அல்லர். 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் கம்பர் என்று மு. அருணாசலம் குறிப்பிடுகிறார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ் இலக்கிய வரலாறு, 12 ஆம் நூற்றாண்டு, பாகம் 2, பக்கம் 277