சம்மநாடு தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்மநாடு தேவி கோயில், கேரள மாநிலத்தில் உள்ள ஒரு இந்துக்கோயிலாகும். [1] தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில், வைட்டிலாவிற்கும் சேர்த்தலா நகரத்திற்கும் இடையே 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கும்ப மாதத்தில் 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

துணைக்கோயில்கள்[தொகு]

இங்கு சாஸ்தா கோவில், கிருஷ்ணர் கோயில் ஆகிய இரண்டு துணைக் கோயில்கள் உள்ளன:

நிர்வாகம்[தொகு]

இந்தக் கோயிலானது "எட்டு வீட்டில் கார்த்த குடும்பம்" என்று அழைக்கப்படுகின்ற குடும்பத்திற்குச் சொந்தமானதாகும். அக்குடும்பத்தில் எட்டு குடும்பங்களும், அவர்களது துணைக் குடும்பங்களும் உள்ளன. அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chammanad Devi Temple
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மநாடு_தேவி_கோயில்&oldid=3825614" இலிருந்து மீள்விக்கப்பட்டது