சம்சார நௌகா
சம்சார நௌகா | |
---|---|
இயக்கம் | எச். எல். என். சின்ஹா |
தயாரிப்பு | பிரகதி ஸ்டார் கம்பைன்ஸ் |
கதை | எச். எல். என். சின்ஹா |
இசை | ஜி. கோவிந்தராஜுலு நாயுடு |
நடிப்பு | பி. ஆர். பந்துலு டி. ஆர். ராமச்சந்திரன் டி. ஆர். உபேந்திரா டி. சூர்யகுமாரி எம். டி. ஆண்டாள் பிரேமாவதி |
வெளியீடு | மே 14, 1948 |
ஓட்டம் | . |
நீளம் | 15283 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சம்சார நௌகா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எல். என். சிம்ஹா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஆர். பந்துலு, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
1935 ஆம் ஆண்டு சம்சார நௌகா திரைப்படம் கன்னட மொழியில் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இதுவே கன்னட மொழியில் வெளிவந்த முதலாவது சமூகப் படம் ஆகும். மிகப் பெரும் வெற்றியைத் தந்த இத்திரைப்படம் இதே பெயரில் புகழ்பெற்ற மேடை நாடகம் ஒன்றைத்தழுவி எடுக்கப்பட்டது. இந்நாடகம் தென்னிந்தியா முழுவதும் 4,000 தடவைகளுக்கு மேல் மேடையேறியுள்ளது.
கதாநாயகன் (பந்துலு) கதாநாயகியை (பிரேமாவதி) அவனது தந்தையின் விருப்பத்துக்கு எதிராக மணக்கிறான். பின்னர் செய்யாத ஒரு கொலைக்கு குற்றம் சாட்டப்படுகிறான்.
தமிழ்த் திரைப்படத்தின் வசனங்களை ஏ. டி. கிருஷ்ணசுவாமி (அறிவாளி, மனம் ஒரு குரங்கு, ஸ்ரீவள்ளி, சபாபதி திரைப்படங்களை இயக்கியவர்) எழுதியிருந்தார்.
உசாத்துணை
[தொகு]- Blast from the past, Samsara Nowka (1948) பரணிடப்பட்டது 2010-11-24 at the வந்தவழி இயந்திரம், RANDOR GUY, த இந்து, ஏப்ரல் 23, 2010- (ஆங்கில மொழியில்)