ஏ. டி. கிருஷ்ணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏ. டி. கிருஷ்ணசுவாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஏ. டி. கிருஷ்ணசாமி
1940களில் கிருஷ்ணசாமி
பிறப்பு1905
இறப்புதிசம்பர் 24, 1987 (அகவை 81–82)
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதை, வசன எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1930கள் - 1971
அறியப்படுவதுசபாபதி (1941 திரைப்படம்)

ஏ. டி. கிருஷ்ணசாமி (A. T. Krishnaswamy, 1905 – திசம்பர் 24, 1987) தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும், கதை வசன எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். 1941 இல் வெளிவந்த சபாபதி திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி படிக்கும் போதே நாடகங்கள் எழுதுவதிலும் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டார். பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபா நாடகக் கம்பனியில் இணைந்து நடித்தார்.[1]

கிருஷ்ணசுவாமி 1934-ஆம் ஆண்டிலேயே ஏ. வி. மெய்யப்பனின் தொடர்புகள் ஏற்பட்டது. அவரது சரசுவதி ஸ்டோர்சு என்ற இசைத்தட்டு நிறுவனம் வெளியிட்ட நாடக இசைத்தட்டுகளுக்கு வசனம் எழுதிக் கொடுத்தார்.[1] ஏவிஎம் நிறுவனம் தயாரித்த நந்தகுமார் (1938) திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் பாடிய ‘யுக தர்ம முறையே' என்ற பாடலை எழுதினார்.[1] இதே படத்தில் லலிதா வெங்கடராமன் பின்னணி பாடிய ‘தீனதயாபரனே திவ்யனே' என்ற பாடலையும் இயற்றினார்.[1]

ஏவிஎம்மின் சபாபதி (1941) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[1] கன்னடத்தில் வெளியான சத்ய ஹரிச்சந்திரா என்ற வெற்றிப் படத்தை இயக்கினார். இது 1944 இல் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. தமிழ்ப் படத்திற்கு இவரே வசனங்களை எழுதினார்.[1] தொடர்ந்து வித்யாபதி (1946), மனம் ஒரு குரங்கு ஆகிய திரைப்படங்களை இயக்கினார். அறிவாளி இவரது மற்றுமொரு வெற்றிப் படம் ஆகும்.[2]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._டி._கிருஷ்ணசாமி&oldid=3393689" இலிருந்து மீள்விக்கப்பட்டது