சம்சாத்து உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்சாத்து உசைன்
Shamshad Husain
பிறப்புசம்சாத்து உசைன்
1946
மும்பை, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு24 அக்டோபர் 2015
புது தில்லி, இந்தியா
தேசியம் இந்தியாn
கல்விஇராயல் கலைக் கல்லூரி, இல்ண்டன்
அறியப்படுவதுஓவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கட்டுப்படுத்தப்பட்ட தட்டு மூலம் மக்களை வர்ணித்தல்
விருதுகள்லலித் கலா அகாடமியின் தேசிய விருது, 1983.[1]

சம்சாத்து உசைன் (Shamshad Hussain) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓவியர் ஆவார். 1946 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். மக்புல் ஃபிதா உசைன் எனப்படும் எம்.எஃப் உசைனின் மகனாகவும் இவர் அறியப்படுகிறார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சம்சாத்து 1946 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் [3]

பரோடா நுண்கலை கல்லூரியில் பயின்றார், அங்கு ஓவியத்தில் பட்டய வகுப்பில் படித்தார். பின்னர் இவர் இலண்டனில் உள்ள இராயல் கலைக் கல்லூரியில் படித்தார்,[4] கலை பற்றிய எனது பார்வை இங்கிருந்த நேரந்தான் மாற்றியது" என்று உசைன் ஒரு நேர் காணலில் கூறினார்.

தொழில்[தொகு]

இவரது முதல் தனி கண்காட்சி 1968 ஆம் ஆண்டில் நடந்தது. இந்தக் கண்காட்சியில்தான் உசைன் தனது முதல் ஓவியத்தை 50 ரூபாய்க்கு விற்றார்.[5] 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.

விருதுகள்[தொகு]

1983 ஆம் ஆண்டில் சம்சாத்து லலித் கலா அகாடமியின் தேசிய விருதை வென்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Shamshad Hussain". The South Asian. January 2001. பார்க்கப்பட்ட நாள் 20 August 2011.
  2. "M F Husain's son dies of liver cancer at 69". The Indian Express. 26 October 2015.
  3. "SubcontinentArt - Artist Profile - Shamshad Husain". பார்க்கப்பட்ட நாள் 20 August 2011.
  4. "Our artists - Shamshad Hussain". Quartet Art. Archived from the original on 30 March 2012. பார்க்கப்பட்ட நாள் 20 August 2011.
  5. "Shamshad Husain's journey to fame". தி இந்து. 3 March 2008. பார்க்கப்பட்ட நாள் 20 August 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சாத்து_உசைன்&oldid=3770258" இலிருந்து மீள்விக்கப்பட்டது