சமூகமயமாக்கம்
சமூகவியலில் சமூகமயமாக்கம் (socialization) என்பது சமூகத்தின் விதிமுறைகள், கருத்தியல் ஆகியவற்றை உள்வாங்கும் வழிமுறையைக் குறிக்கும். சமூகமயமாக்கம், கற்றலையும் கற்பித்தலையும் உள்ளடக்கி இருப்பதால் சமூக, பண்பாட்டுத் தொடர்ச்சியை எய்துவதற்கு இது வழியாக உள்ளது.[1]:5[2] சமூகமயமாக்கத்துக்கு வளர்ச்சி உளவியலுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.[3] தமது பண்பாட்டைக் கற்றுக்கொள்வதற்கும் வாழ்வதற்கும் மனிதருக்குச் சமூக அனுபவம் தேவையாக உள்ளது.[4] சமூகமயமாக்கமே வாழ்க்கை முழுவதுமான கற்றலின் வெளிப்பாடாக உள்ளது. அத்துடன் இதுவே வளர்ந்தோரினதும், சிறுவரினதும் நடத்தைகள், நம்பிக்கைகள், செயற்பாடுகள் மீது முதன்மையான செல்வாக்கைச் செலுத்துகிறது.[5][6]
சமூகமயமாக்கம் அது இடம்பெறும் சமூகத்தைப் பொறுத்தவரை விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அச்சமூகத்தில், சிலவேளைகளில் அது ஒழுக்கம் எனப்படுகின்றது. தனி மனிதரின் நோக்குகள் சமூகத்தின் ஒருமனதான நோக்குகளின் செல்வாக்குக்கு உட்பட்டவை. இந்த ஒருமனதான நோக்குகளே சமூகத்தினால் எற்ற்கப்படவையாகவும், வழமையானவை என்றும் கருதப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clausen, John A. (ed.) (1968) Socialization and Society, Boston: Little Brown and Company
- ↑ Macionis, John J. (2013). Sociology (15th ed.). Boston: Pearson. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0133753271.
- ↑ Billingham, M. (2007) Sociological Perspectives p.336 In Stretch, B. and Whitehouse, M. (eds.) (2007) Health and Social Care Book 1. Oxford: Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-435-49915-0
- ↑ Macionis, John J., and Linda M. Gerber. Sociology. Toronto: Pearson Canada, 2011. Print.
- ↑ MLA Style: "socialization." Encyclopædia Britannica. Encyclopaedia Britannica Student and Home Edition. Chicago: Encyclopaedia Britannica, 2010.
- ↑ Cromdal, Jakob (2006). "Socialization". In K. Brown (ed.). Encyclopedia of language and linguistics. North-Holland: Elsevier. pp. 462–66. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/B0-08-044854-2/00353-9.