சப்போரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்போரா நதி
Chapora River
சப்போரா கோட்டையிலிருந்து சப்போரா நதியின் தோற்றம்
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்கோவா (மாநிலம்)
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுமகாராட்டிரா, இந்தியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அரபிக் கடல், இந்தியா
நீளம்21 km (13 mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ வலதுதில்லாரி

சப்போரா நதி (Chapora River) இந்தியாவின் வடக்கு கோவாவில் பாயும் ஒரு நதியாகும். மேற்கு நோக்கி சப்போரா கிராமத்தின் வழியாக அரபிக் கடலுக்குள் கலக்கிறது. வடக்கு கோவா வட்டங்களான பெர்னேம் மற்றும் பார்தேசு இடையேயான எல்லையை இந்நதி வரையறுக்கிறது.

அண்டை மாநிலமான மகாராட்டிராவில் உள்ள ராம்காட்டில் உருவாகும் சப்போரா நதி கோவாவிற்குள் நுழைந்து பின்னர் அரபிக்கடலில் பாய்கிறது. [1] சுற்றுலாத் தலமான வாகேட்டர் கடற்கரை தெற்கே உள்ள தோட்டத்திலேயே அமைந்துள்ளது, வடக்கே மோர்கிம் என்ற கிராமம் உள்ளது. மோர்கிம் முதல் சியோலிம் வரை செல்லும் பாலம் சப்போராவுக்கு குறுக்காகச் செல்கிறது. 18 ஆம் நூற்றாண்டில் இந்நதி போர்த்துகீசிய கோவாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லையைக் குறித்தது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்போரா_ஆறு&oldid=3777096" இலிருந்து மீள்விக்கப்பட்டது