சப்புக்கட்டை (இசைக்கருவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்புக்கட்டை அல்லது சிக்கா
வேறு பெயர்கள்சப்பு, சுப்பு , சிக்கா, சிக்க
வகைப்பாடுதாள இசைக்கருவி
மேலதிக கட்டுரைகள்

சப்புக்கட்டை (பஞ்சாபி: ਸੱਪ), அல்லது சிக்கா கட்டை (பஞ்சாபி: ਛਿੱਕਾ), என்றும் அழைக்கப்படுவதோடு, சில இடங்களில் சாப்பு அல்லது சுப்பு என்றும் உச்சரிக்கப்படும் இந்த இசைக்கருவி பஞ்சாபின் பூர்வீக இசைக்கருவிகளில் ஒன்றாகும்.[1][2] இது நாட்டுப்புற பஞ்சாபிய நடனங்களான பாங்கரா மற்றும் மல்வாய் கித்தா ஆகியவை நிகழ்த்தப்படும் போது ஆகியவற்றுடன் பயன்படுத்தப்படுகிறது [3]

கருவியின் வடிவம்[தொகு]

இது பொதுவாக வலுவான (கருப்பு தாலி)மரத்தின் கட்டைகளை கொண்டு, பல X வடிவ சிறிய பகுதிகளாக ஒன்றுடன் ஒன்று இணைக்கட்டு செய்யப்படுகிறது. இந்த கருவிகள் பொதுவாக மிகவும் உறுதியானவை. ஏனெனில் இவைகள் உடைக்க முடியாதபடி உருவாக்கப்படுகிறது. [2]


இசைக்கருவியின் பயன்பாடு[தொகு]

பொதுவாகவே , இந்த தாள வாத்தியத்தை இரு கைவிரல்களில் அதன் முனையை மாட்டிக்கொண்டு வாசிப்பன் மூலம் ஒரு தனித்துவமான கைதட்டல் ஒலியை ஏற்படுத்தலாம். இக்கருவியில் உள்ள X வடிவ சிறுதுண்டுகள் ஒன்றோடொன்று விரிந்து சரியும் போதெல்லாம் ஏற்படுத்தும் ஓசை தனித்தன்மை கொண்டதாகும். பலர் சேர்ந்து பயன்படுத்தும் போது, அவர்களுக்கு முறையான பயிற்சி இல்லாவிடில் தாளம் தப்பும் வாய்ப்பு உருவாகும். பாங்க்ரா நடனக் கலைஞர்கள் தங்கள் நடனத்தின் போது தாவல்கள், குந்துகைகள் அல்லது எளிய பாங்க்ரா நகர்வுகளைச் செய்யும்போது இந்த சப்புக்கட்டையைத் தட்டுவதன் மூலம் தங்கள் ஒத்திசைவைக் காட்டுகிறார்கள். இந்த தாளக்கருவியின் ஒருங்கிணைப்பு நாட்டுப்புற நடனங்களை மேலும் ஆற்றல்மிக்கதாக மாற்றுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pande, Alka (2006). Folk Music & Musical Instruments of Punjab, Volume 1. Mapin Publishers Pvt. Ltd.. பக். 128. 
  2. 2.0 2.1 ਅਰੁਣਜੀਤ ਸਿੰਘ ਟਿਵਾਣਾ. "ਭੰਗੜੇ 'ਚ ਵਰਤੇ ਜਾਣ ਵਾਲੇ ਲੋਕ ਸਾਜ਼". www.dhaula.in. பார்க்கப்பட்ட நாள் 10 Mar 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Malwai Giddha Dance - Performed by Old Men of Punjab". www.discoveredindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.