சப்த சிவத் தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சப்த சிவத் தலங்கள் என்பவை காஞ்சிபுரத்தின் சேய் ஆற்றுக் (செய்யாறு) கரைகளில் அமைந்துள்ள ஏழு சிவத்தலங்களாகும். செய்யாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஏழு சிவாலயங்கள் சப்த கரை கண்ட சிவாலயங்கள் எனவும், தென் கரையில் அமைந்துள்ளவை சப்த கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சப்த சிவத்தலங்கள் தோன்றிய தொன்கதை[தொகு]

காஞ்சிபுரத்தில் உமையம்மை (பார்வதி) சிவலிங்கம் அமைத்து வழிபட்டு,சிவபெருமானின் இடப்பாகம் வேண்டினார். இறைவனும் உமையம்மை முன் தோன்றி திருவண்ணாமலைக்கு வந்து பெறும்படி அருளினார். இறைவனிடம் இடப்பாகம் பெறும் பொருட்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டார், வழியில் வாழைப் பந்தல் என்ற ஊர் அருகே வந்த போது மாலைப் பொழுதாகிவிட லிங்க பூசை செய்ய வேண்டுமென முருகனிடம் கேட்டார்.

வாழைப்பந்தல் அருகே முருகன் தனது சக்தி வேலாயுதத்தை கையில் எடுத்து எரிந்தார், அந்த வேல் சவ்வாது மலைத் தொடரில் உள்ள ஏழு சிகரங்களில் தவம் செய்த அந்தணர்கள் 1)புத்திராண்டன், 2)புருகூதன், 3)போதன், 4)போதவான், 5)பாண்டரங்கன், 6)வாமன், 7)சோமன் ஆகியோரை மாய்த்து மலையை துளைத்தது. அதிலிருத்து நீர், பெருகி ஆறாக வந்தது சேய் (சேய் = மகன்) தோற்று வித்ததால் சேய் ஆறு என்பது நாளடைவில் செய்யாறு என்றும் ஆகிவிட்டது.[1] தவம் செய்த ஏழு அந்தணர்களை மாய்த்ததால் முருகப் பெருமானுக்குக் கொலைபாதக தீவினை (பிரம்மகத்தி தோசம்) தொற்றிக் கொள்ள உமாதேவியார் சேய் ஆற்றின் வட கரையில் ஏழு சிவ ஆலயங்களையும், தென்கரையில் ஏழு சிவ ஆலயங்களையும் நிறுவி தொழுதால், தோசம் நீங்கும் என்று கூற அதன்படி செய்து தோசம் நீங்கியது எனபது நெடுங்கால நம்பிக்கை.

சப்த கரைகண்ட தலங்கள்[தொகு]

சேய் ஆற்றின் (செய்யாறு) வட கரையில் அமைந்த சிவாலயங்கள் சப்த கரை கண்ட சிவத் தலங்கள் ஆகும், அவை

 1. காஞ்சி
 2. கடலாடி
 3. மாம்பாக்கம்
 4. எலத்தூர்
 5. மாதிமங்கலம்
 6. பூண்டி
 7. குருவிமலை.

சப்த கைலாயங்கள்[தொகு]

சேய் ஆற்றின் (செய்யாறு) தென் கரையில் அமைந்த சிவாலயங்கள் சப்த கைலாயங்கள் ஆகும், அவை

 1. மண்ட கொளத்தூர்
 2. கரைப்பூண்டி
 3. தென் பள்ளிப் பட்டு
 4. பழங்கோயில்
 5. நார்த்தாம் பூண்டி
 6. தாமரைப் பாக்கம்
 7. வாசு தேவம்பட்டு

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசலப் புராணம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்த_சிவத்_தலங்கள்&oldid=3518271" இலிருந்து மீள்விக்கப்பட்டது