சப்தக்கு இசை ஆண்டு விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்தக்கு இசை ஆண்டு விழா
Saptak Annual Music Festival
வகைஇந்தியப் பாரம்பரிய இசை (இந்துசுத்தானி, கருநாடக இசை, கசல் (இசை))
நாள்1–13 சனவரி
அமைவிடம்(கள்)அகமதாபாது, இந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1980 - முதல்
வலைத்தளம்
Saptak

சப்தக்கு இசை ஆண்டு விழா (Saptak Annual Festival of Music) இந்தியாவின் அகமதாபாத்தில் பதின்மூன்று நாள் நடைபெறும் இந்திய பாரம்பரிய இசை விழா ஆகும். இது சப்தக்கு இசைப் பள்ளி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் சனவரி முதல் பதின்மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் இந்த இசை விழாவில் கலந்து கொள்கின்றனர். [1] [2]

வரலாறு[தொகு]

1980 ஆம் ஆண்டு நந்தன் மேத்தா மற்றும் அவரது மனைவி மஞ்சு மேத்தா, உரூபாண்டே சா, பாரதி பரிக்கு மற்றும் டி.டி. திரிவேதி ஆகியோரால் இந்த இசை விழா தொடங்கப்பட்டது. பண்டிட் ரவிசங்கர் மற்றும் பண்டிட் கிசன் மகராச்சு ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். [2] 1980 ஆம் ஆண்டில் ஒரு நாள் நிகழ்வாக நடைபெற்ற இவ்விழா 2010 ஆம் ஆண்டில் 13 நாட்களில் 15 அமர்வுகளாக 130 பேருக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியாக விரிவடைந்தது [3]

இந்த விழாவில் வளர்ந்து வரும் திறமையாளர்கள் மற்றும் நிறுவப்பட்ட கலைஞர்கள் உள்ளனர். தூய பாரம்பரிய இசையைத் தவிர, நாட்டுப்புற இசை, பாரம்பரிய நடன வடிவங்கள் மற்றும் தும்ரி போன்ற அரை-பாரம்பரிய வடிவங்களின் நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுகின்றன.[3]

படக்காட்சியகம்[தொகு]

நந்தன் மேத்தாவின் வாழ்க்கை மற்றும் திருவிழாவின் வரலாறு குறித்த படக்காட்சியகம் 2012 ஆம் ஆண்டில் [2] திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Saptak at 31: Music gods return to city". 24 December 2010. பார்க்கப்பட்ட நாள் 4 April 2016.
  2. 2.0 2.1 2.2 "Pt Nandan Mehta's legacy relived in Ahmedabad". 23 September 2012. பார்க்கப்பட்ட நாள் 4 April 2016.
  3. 3.0 3.1 "Music icon Nandan Mehta hands Saptak legacy to GenNext heirs". பார்க்கப்பட்ட நாள் 4 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தக்கு_இசை_ஆண்டு_விழா&oldid=3854146" இலிருந்து மீள்விக்கப்பட்டது