உள்ளடக்கத்துக்குச் செல்

சபி அகீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபி அகீல் (Shafi Aqeel (1930 - 6 செப்டம்பர் 2013) ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், கலை விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் பல பத்திரிகைகளில் பதிப்பாசிரியராகவும் ,இணைப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் தேசிய உருது மொழி செய்தித்தாளான டெய்லி ஜாங்கிற்கு கலை மற்றும் இலக்கியம் குறித்த கட்டுரைகளை வழங்கியுள்ளார்.[1] 2013 ஆம் ஆண்டில் இவர் காலமானார். டெய்லி ஜாங் செய்தித்தாளில் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் பணியாற்றிய அவர், அதன் இலக்கிய இதழின் பொறுப்பாளராக இருந்தார்.

கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

சபி அகீல் 1930 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் லாகூருக்கு அருகாமையில் உள்ள சடஹர் பஜாரில் வாழ்ந்தார்.[1] இவர் முறையாக பள்ளி சென்று பயிலவில்லை. மசூதியில் குர் ஆன் படிக்கக் கற்றுக் கொண்டார். வறுமை எனக்கு இல்லை எனில் நான் இவ்வளவு சாதனைகளைப் புரிந்திருக்க இயலாது என இவர் கூறினார். பாக்கித்தான் தேசிய பாதுகாவளாராக இவர் பணியாற்றியுள்ளார். இவர் அங்கு பணியாற்றிய சமயங்களில் மிகக் கடுமையான வறுமையினை சந்தித்தார். மேலும் குடிபெயர்ந்தவர்களிடையே காலரா போன்ற நோய்களும் பரவியது. அந்த சமயத்தில் இவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் இவருக்கு முறையான உணவுகளும் வழங்கப்படவில்லை.

எழுத்து வாழ்க்கை

[தொகு]

அவரது முதல் கட்டுரை 1947 ஆம் ஆண்டில் ஜமீன்தார் செய்தித்தாளில் வெளிவந்தது, மேலும் இவர் தனது பெயரை முகமது ஷாஃபி என்பதிலிருந்து ஷாஃபி அகீல் என்று மாற்றினார். ஆம் ஆண்டில் ம்-உத்-தின் (ஷாஹீத்) எனும் வன்பகடி பிரச்சினையால் இவர் தனது பெயரினை சாபி அகீல் என மாற்றிக் கொண்டார். மரபு ரீதியாக இவர் கவிதை எழுதக் கற்றுக் கொள்ளவில்லை.இருந்தபோதிலும் 1948 ஆம் ஆண்டில் கவிதைகளை எழுதத் துவங்கிய இவர் 1951 ஆம் ஆண்டில் ஏர்னஸ்ட் எனும் கவிதையினை வெளியிட்டார்.

அகீல் 1950 சனவரியில் கராச்சிக்கு குடிபெயர்ந்தார். இவர் ஒரு ஓவியராகவும் பணியாற்றியுள்ளார். மஜீத் பல்வேறு பனிகளில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களிலும் பணியாற்றினார். பின்பு அவருக்கு நமக்தனில் உதவி ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு மாதத்திற்கு ரூ .60 சம்பளத்துடன் ஒரு பத்திரிகை ஆசிரியரின் வேலை கிடைத்தது.[2]

சிறுகதைகள் மற்றும் ஒரு புதினத்தினையும் எழுதினார். 1952 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு, பூக்கே (பசி) என்ற தலைப்பில் வெளியானது. அந்த சிறுகதை மூலம் இவர் சில சிக்கல்களைச் சந்தித்தார்.மேலும் அந்த படைப்பிற்காக ஆபாச சட்டம் பிரிவு 292 இன் கீழ் இவர் விசாரணைக்கு ஆளானார். பின்னர் இவர் பத்திரிகையாளர் ஆகா ஷோரிஷ் காஷ்மீரி மற்றும் எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான சதாத் ஹசன் மாண்டோ ஆகியோரை தனது பாதுகாப்பு சாட்சிகளாக அழைத்தார் . விசாரணை இரண்டரை ஆண்டுகள் நடந்தது.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ஷாஃபி அகீல் பிரம்மச்சரியமான வாழ்க்கையை வாழ்ந்தார், ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை.[2]

மரணம் மற்றும் அஞ்சலி

[தொகு]

அகீல் தனது 83 வயதில் 2013 செப்டம்பர் 7 அன்று காலமானார். டெய்லி ஜாங் செய்தித்தாளில் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் பணியாற்றிய அவர், அதன் இலக்கிய இதழின் பொறுப்பாளராக இருந்தார்.[3] பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பாபோஷ்நகரில் உள்ள கல்லறையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.[4]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபி_அகீல்&oldid=3740716" இலிருந்து மீள்விக்கப்பட்டது