சாதத் ஹசன் மண்ட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாதத் ஹசன் மண்ட்டோ
பிறப்பு11 மே 1912
சம்ராலா, லூதியானா மாவட்டம், பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா), பிரித்தானிய இந்தியா
இறப்பு18 சனவரி 1955(1955-01-18) (அகவை 42)
லாகூர், பஞ்சாப், பாகிஸ்தான்
பணிகதை மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1934–1955
விருதுகள்Nishan-e-Imtiaz

சாதத் ஹசன் மண்ட்டோ (Saadat Hassan Manto, 11 மே 1912 – 18 சனவரி 1955) என்பவர் பாக்கித்தானைச் சேர்ந்த உருது மொழி எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைகள், புதினம், கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்.[1]

பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சாதத் ஹசன் மண்ட்டோ 1912-ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி பஞ்சாப் மாகாணம் லூதியானா மாவட்டம் சாம்ராலா வட்டாரத்தின் பாப்ரோடி கிராமத்தில் பிறந்தவர். காஷ்மீர் முஸ்லிம் குடும்பத்தைச் சார்ந்த இவரது தந்தை அதிகாரத் தோரணையோடு வாழ்ந்தவர். தாயோ மிகவும் இளகிய மனம் படைத்தவர். இரண்டு முரண்பட்ட சக்திகளுக்கிடையில் சிக்கி உருப்பெற்றவர் தான் மண்ட்டோ.உருது இலக்கியத்தில் முத்திரை பதித்த மண்ட்டோ மெட்ரிக் தேர்வில் உருது மொழிப் பாடத்தில் தேர்ச்சியடையவில்லை என்பது வேடிக்கையான உண்மையாகும். ஆங்கிலத்தில் வெளி வந்த ரஷ்ய, ஃபிரெஞ்சு இலக்கியங்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செகாவ், மாக்சிம் கார்க்கி, விக்டர் ஹியூகோ, ஆஸ்கர் ஓயில்ட் ஆகியோரின் புதினங்களால் கவரப்பட்டார்.[2]

இலக்கியப் பணி[தொகு]

அவரது தொடக்க கால இலக்கியப் பணியானது மொழி பெயர்ப்பாகவே அமைந்தது.1936-ம் ஆண்டு இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார்.பேச்சு மொழி பஞ்சாபி என்றாலும் இலக்கியத்தை கடைசி வரை உருது மொழியிலேயே படைத்தார்.இந்திய - பாகிஸ்தான் பிரிவினையும் அதையொட்டி நடந்த மரணங்களும் பாலியல் வன்கொடுமைகளும் மண்ட்டோவைத் துடிக்க வைத்தன.

{{Quote|ஒரு லட்சம் இந்துக்களும், ஒரு லட்சம் முஸ்லிம்களும் இறந்து போனார்கள் என்று சொல்லாதீர்கள், இரண்டு லட்சம் மனிதர்கள் இறந்து போனார்கள் என்று சொல்லுங்கள். இரண்டு லட்சம் மனிதர்கள் மரணமடைந்ததில் துயரம் கொள்வதற்கு ஏதுமில்லை. உண்மையில் துயரம் கொள்ள வைப்பது எதுவென்றால் கொல்லப்பட்டவர்களும் கொலை செய்தவர்களும் ஒரே வகையைச் சார்ந்தவர்கள் என்பது தான்..

படைப்புகள்[தொகு]

22 சிறுகதைத் தொகுப்புகள், ஒரு‍ நாவல், 3 கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். 1936-ல் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மண்ட்டோ கி. அப்சானே’ வெளியானது.[2]

சிறுகதைகள்[தொகு]

  1. காலித்
  2. அவமானம்
  3. திற
  4. சகாய்
  5. சில்லிட்டுப் போன சதைப் பிண்டம்

உரைநடை[தொகு]

1954, மார்ச் 15 இல் அங்கிள் சாம்க்கு‍ மண்ட்டோ கடிதம் என்ற உரைநடை இலக்கியத்தை எழுதினார்.[3]

இறப்பு[தொகு]

1955 - ஜனவரி 18ம் நாள் தனது 42வது வயதில் லாகூரில் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Saadat Hassan Manto Author detail at penguinbooksindia.
  2. 2.0 2.1 "நாம் எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம்!". www.theekkathir.in. தீக்கதிர். அக்டோபர் 19, 2013. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு, அவமானம் (செப்டம்பர் 2013) (in தமிழ்). சாதத் ஹசன் மண்ட்டோ [அவமானம் மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு]. சென்னை: பாரதி புத்தகாலயம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978938282698901. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதத்_ஹசன்_மண்ட்டோ&oldid=3243481" இலிருந்து மீள்விக்கப்பட்டது