சபியா அப்பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபியா அப்பாட்டு
Sabia Abbat
பிறப்புஅரிப்பூர், கைபர் பக்துன்வா மாகாணம்.
தேசியம்பாக்கித்தான்
கல்விஉடற்கல்வியில் இளங்கலை
பணிதொழில்முறை மிதிவண்டி ஓட்டுனர்

சபியா அப்பாட்டு (Sabia Abbat) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழில்முறை மிதிவண்டி ஓட்டுனராவார்.[1][2][3]

பின்னணி[தொகு]

சபியா அப்பாட்டு, பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள அரிப்பூரில் பிறந்தார் [4] உடற்கல்வியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார்.[5] [6]

தொழில்[தொகு]

சபியா சொந்த ஊரில் விளையாட்டுகளில் பங்கேற்பது அவ்வூரின் வழக்கத்திற்கு மாறான ஒரு செயலாகும். இருப்பினும், சபியா சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். 2011 ஆம் ஆண்டு, பனியாவில் நடந்த பெண்களுக்கான மிதிவண்டி ஓட்டுதல் போட்டியை சபியா கண்டார். அங்கு பெண்கள் சரியாக மிதிவண்டி ஓட்டமுடியாமல் தவிப்பதை இவர் கண்டார். [7] [8] இந்நிகழ்ச்சி சபியாவை மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொள்ள தூண்டியது. [9] சபியா தனது மாமாவின் மிதிவண்டியை பயிற்சிக்காக எடுத்துச் சென்றார். தொடக்கத்தில் அதை சவாரி செய்ய முடியவில்லை. இறுதியாக மிதிவண்டியை சரியாக சவாரி செய்வதற்குள் பலமுறை கீழே விழுந்தார். [10] [11] போதிய வசதிகள் இல்லாததால் சபியா பயிற்சிக்காக இலாகூர் சென்றார். [12] [13] 2013 ஆம் ஆண்டில் தேசிய மிதிவண்டி ஓட்டுதல் வெற்றியாளர் கோப்பையை வென்ற அசாரா பிரிவின் முதல் பெண்மணி ஆனார். [14] [15] [16] [17] [18] ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் பாக்கித்தானை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். [19]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The sky's the limit". The Express Tribune (in ஆங்கிலம்). 2015-11-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  2. "Digital startups and women entrepreneurs – This is how far we have come | Pakistan Today". www.pakistantoday.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  3. iiu. "international seminar on development of Pakistan" (PDF).
  4. John, Sarah (2018-01-11). "20 amazing Pakistanis who have made us proud!". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  5. "Sabia Abbat – Riding To Achieve Her Dreams -" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-08-15. பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  6. "Face of Pakistan: Sabia Abbat - Champion of Mobility and Sport". The News Tribe (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-08-15. பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  7. Arshad, Ambreen (2016-03-05). "Wonder women of Pakistan". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  8. "- Proud to be a Girl!". The Beaconhouse Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  9. "Pakistan's unung heroes: The silent crusaders". Pakistan Defence (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  10. "National cycling champion Sabia Abbat: an inspiration to Pakistani women". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  11. Haider, Mariya. "The Real Baaghis". Reviewit.pk (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  12. "Sabia Abbat Archives". The News Tribe (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  13. Admin (2016-09-09). "Highlighting the unsung heros". Behtareen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  14. www.webspider.pk, Web Spider (pvt) Ltd. "Breaking the Mold: Pakistan's Trailblazers Making Their Mark on the World". www.hilal.gov.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  15. propakistani. "ufone celebrates local heroes".
  16. "KARACHI CHRONICLE: Salute the men supporters of women heroes – Business Recorder" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  17. AmbyZee (2017-03-12). "Gosh This Woman…". The Free Bird (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  18. Naveed, Zermina (2017-11-16). "These 20 Women from Pakistan are Breaking More Stereotypes than You Can Imagine!". Parhlo (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  19. Asif, Yeshel (2019-02-14). "5 Pakistani Women Who Are Breaking Stereotypes". Naya Daur (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபியா_அப்பாட்டு&oldid=3899226" இலிருந்து மீள்விக்கப்பட்டது