சபாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபாத்து (Sabathu) இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சோலான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு படைவீரர் குடியிருப்பு நகரமாகும். சுபாத்து என்றும் இந்நகரம் அழைக்கப்படுகிறது. ஆங்கிலோ-நேபாளப் போருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர்பைக் கொண்ட இந்நகரம் இப்போது இந்திய இராணுவத்தின் 1ஆவது கூர்க்கா சுழல்துப்பாக்கி படைப்பிரிவினர் மற்றும் 4ஆவது கூர்க்கா சுழல்துப்பாக்கி படைப்பிரிவினர் ஆகியவர்களின் குடியிருப்பு மையமாக உள்ளது.

புவியியல்[தொகு]

சபாத்து நகரம் கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 1265 மீட்டர் (4150 அடி) உயரத்தில் உள்ளது. [1]  

மக்கள்தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சபாத்துவின் மக்கள் தொகை 8720 ஆக இருந்தது.[2] இம்மக்கள் தொகையில் ஆண்கள் சதவீதம் 47% ஆகவும், பெண்கள் சதவீதம் 53% ஆகவும் இருந்தது. சபாத்துவின் சராசரி கல்வியறிவு விகிதம் 86% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாக இருந்தது. ஆண்களின் கல்வியறிவு 91% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 77% ஆகவும் இருந்தது. சபாத்துவின் மக்கள் தொகையில் 9% பேர் 6 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.

பிரித்தானிய இராணுவப் படைகள் சிகிச்சை பெற்று குணமடைய சபாத்துவுக்குச் சென்றன. இது 19 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராந்திய தொழுநோயாளர் காலனியை கொண்டிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Sabathu
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாத்து&oldid=3920126" இலிருந்து மீள்விக்கப்பட்டது