உள்ளடக்கத்துக்குச் செல்

சபர்மதி அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபர்மதி அனல் மின் நிலையம் (Sabarmati Thermal Power Station) இந்தியாவின், குசராத்து மாநிலத்தில் உள்ள நகரமான அகமதாபாத் நகரில் நிறுவப்பட்டுள்ளது. நிலக்கரியை அடிப்படை எரிபொருளாகப் பயன்படுத்தும் அனல் மின் நிலையமாக சபர்மதி அனல் மின் நிலையம் விளங்குகிறது. ”டோர்ரண்ட் சக்தி” என்ற நிறுவனம் சபர்மதி அனல் மின் நிலையத்தை இயக்குவதால் டோர்ரண்ட் சபர்மதி அனல் மின் நிலையம் என்ற பெயராலும் இம்மின்னுற்பத்தி நிலையம் அழைக்கப்படுகிறது.

37.5 மெகாவாட் (2X3.75 மெகாவாட் மற்றும் 4x7.5 மெகாவாட்)[1] கொள்திறன் அளவில் முதலாவது மின்னுற்பத்தி் நிலையம் இப்பகுதியில் 1934 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. உரிய அசலான மின்னுற்பத்தி நிலையத்தில் புதிய அனல் மின் நிலையம் 422 மெகாவாட் (1x60 மெகாவாட் , 1x120 மெகாவாட் மற்றும் 2x121 மெகாவாட்) கொள்திறன் அளவில் தொடங்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

அலகு எண் நிறுவப்பட்ட கொள்திறன் (மெ.வா) துவக்கம் தர்போதைய நிலை
C 60 1997 செயல்படுகிறது
D 120 1978 செயல்படுகிறது
E 121 1984 செயல்படுகிறது
F 121 1988 செயல்படுகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18.