சனாதன் மகாகுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனாதன் மகாகுத்து
Sanatan Mahakud
சனாதன் மகாகுத்து உருவப்படம்
உறுப்பினர், ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
2014–2019
முன்னையவர்இயிட்டு பட்நாயக்கு
பின்னவர்மீனாக்சி மகந்தா
தொகுதிசம்புவா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1958 (அகவை 65–66)
நம்பிரா, கேந்துசர் மாவட்டம், ஒடிசா, இந்தியா
அரசியல் கட்சிசுயேட்ச்சை
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு ,
சன சம்மிரிதி கட்சி
பிள்ளைகள்பங்கச்சு மகாகுத்து
பெற்றோர்
  • செமா மகாகுத்து (father)
கல்விபாம்பேரி உயர்நிலைப் பள்ளி, ஒடிசா கேந்துசர்
தொழில்அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்

சனாதன் மகாகுத்து (Sanatan Mahakud) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] ஒடிசாவைச் சேர்ந்த இவர் 2014 ஆம் ஆண்டு முதல் ஒடிசாவிலுள்ள சம்புவா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2]

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதியன்று, கியோஞ்சர் மாவட்ட அதிகாரிகள் சனாதன் மகாகுத்துவின் வீட்டை இடிப்பதாக அறிவித்தனர், ஏனெனில் அது முதலில் எசல் சுரங்க நிறுவனம் & தொழிற்சாலைகள் நிறுவனம் என்ற சுரங்க நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் பின்னர் சனாதன் மகாகுத்து ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றார்.[3]

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், சம்புவா சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராக சனாதன் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவர் மொத்தம் 69,635 வாக்குகள் பெற்று 15 ஆவது ஒடிசா சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சனாதன் மகாகுத்து 1958 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கெந்துசார் மாவட்டத்தின் நம்பிரா கிராமத்தில் ஓர் இந்து கோபால் (யாதவ்) குடும்பத்தில் செமா மகாகுத்து என்பவருக்கு பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ADR. "Sanatan Mahakud(Independent(IND)):Constituency- CHAMPUA(KEONJHAR) - Affidavit Information of Candidate:".
  2. "MLA Sanatan Mahakud Profile - CHAMPUA Constituency". Archived from the original on 24 June 2017.
  3. "Govt to pull down Champua MLA's home | Bhubaneswar News - Times of India". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனாதன்_மகாகுத்து&oldid=3803521" இலிருந்து மீள்விக்கப்பட்டது