சனம் சயீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சனம் சயீத் (பிறப்பு: பிப்ரவரி 2, 1985) [1] ஒரு பாக்கித்தான் நடிகை, பாடகி மற்றும் முன்னாள் மாடல் ஆவார், இவர் முக்கியமான உருது சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் பங்கேற்றுள்ளார். மோமிண்டா டுரைட்டின் ஜிந்தகி குல்சார் ஹை படத்தில் கஷாஃப் முர்தாசாவின் பாத்திரத்தினால் மிகவும் பிரபலமானவர். இதற்காக சிறந்த தொலைக்காட்சி நடிகைக்கான லக்ஸ் ஸ்டைல் விருதுகள் உட்பட ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார்.

லாகூரில் திரைப்பட மற்றும் நாடக ஆய்வுகளில் பட்டம் பெற்ற சயீத், 2010 ஆம் ஆண்டு டாம் தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு வெளியான காதல் தொடரான ஜிந்தகி குல்சார் ஹை மூலம் சயீத் தனது முதல் வணிக வெற்றியை பெற்றார். மாதா-இ-ஜான் ஹை து (2013), டாக்கியன் (2013), ஜிந்தகி குல்சார் ஹை (2013) மற்றும் கடூரத் (2013), கஹின் சந்த் நா ஷர்மா ஜெயே உள்ளிட்ட பல அதிக வசூல் செய்த தொலைக்காட்சித் தொடர்களில் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அவர் முக்கியத்துவம் பெற்றார். கஹின் சந்த் நா ஷர்மா ஜெயே (2013), ஏக் கசக் ரெஹ் கெய் (2015), ஃபிராக் (2014) - மேலும் 2015 ஆம் ஆண்டு குடும்ப நாடகமான தியார்-இ-தில் படத்தில் வில்ல கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன அங்கீகாரத்தைப் பெற்றார். இதனால் ஹம் விருதுகளில் சிறந்த வில்லனாக பரிந்துரைக்கப்பட்டார். சயீத் கடைசியாக தீடன் தொலைக்காட்சி தொடரில் மோஹிப் மிர்சாவுக்கு ஜோடியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

தொலைக்காட்சியில் ஒரு முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சயீத், 2016 காதல் நகைச்சுவை திரைப்படமான பச்சானா மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார், பின்னர் அதே ஆண்டில் டோபரா பிர் சே படத்தில் துணை வேடத்தில் தோன்றினார். இவை இரண்டும் லக்ஸ் ஸ்டைல் விருதுகளில் முறையே சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றன. இவரது குடும்ப நாடக திரைப்படமான கேக் (2018), இவருக்கு லக்ஸ் ஸ்டைல் விருதுகள் மற்றும் பாக்கிஸ்தான் சாதனை விருதுகளில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது. மஹ்-இ-மிர் வாழ்க்கை வரலாற்று நாடகம் திரைப்படம், காலமுறை (பீரியட்) நாடக திரைப்படம் ரஹ்ம் (இரண்டும் 2016) , மெலோட்ராமா ஆசாத் (2017) இவரது மற்ற திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவை. 2019 ஆம் ஆண்டில், சயீத்தை டெய்லி டைம்ஸ் பத்திரிக்கை "பாக்கிஸ்தானின் பெருமை" என்று பெயரிட்டது.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இங்கிலாந்தில் பிறந்தவரான இவரது தந்தை ஓய்வு பெற்ற உட்புற வடிவமைப்பாளராகவும், தாய் கலை ஆசிரியராகவும் இருந்தனர். இவருக்கு ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி முறையே அட்னான் சயீத் மற்றும் அமிரா சயீத் உள்ளனர். [3] பல இன குடும்பமாகிய (அவரது தந்தை ஒரு பஞ்சாபி மக்கள், அவரது தாயார் ஒரு மேமன் ) 1990 இல் கராச்சிக்கு குடிபெயர்ந்தனர். [4] இவர் கராச்சியின் பே வியூ உயர்நிலைப் பள்ளியிலும், எல்'கோல் கல்லூரியிலும் கல்வி பயின்றார். சயீத் தனது 16 வயதில் மாடலிங் தொடங்கினார். [5] இவர் மாடலிங்கில் இருந்து விலகுவதற்கான காரணம், தனது வாழ்க்கையில் முதல்முறையாக தனது தோற்றத்தைப் பற்றி அதிக அளவில் விழிப்புணர்வு கொண்டதே என்று பேப்பர் இதழ் மூலம் ஒப்புக்கொண்டார். [6]

தொழில்[தொகு]

தொலைக்காட்சியில் அறிமுகம் (2010–2011)[தொகு]

2010 ஆம் ஆண்டு ஏஆஒய் டிஜிட்டல்தொலைக்காட்சித் தொடரில் துணை வேடத்தில் சயீத் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். உமேரா அகமதின் நாவலின் தழுவலான டாம்மில் அமினா ஷேக் மற்றும் சனம் பலோச் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். மெஹ்ரீன் ஜபார் இயக்கிய பிஸாவில் சயீத், ஒரு "சுயநல மற்றும் திமிர்பிடித்த பெண்" வேடத்தில் நடித்தார்.[7]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனம்_சயீத்&oldid=2938039" இருந்து மீள்விக்கப்பட்டது