சந்தோஷ் மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தோஷ் மீனா

சந்தோஷ் மீனா (Santosh Meena) (பிறப்பு 1 சூன் 1966) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பர்த்வான் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநராக உள்ளார் மற்றும் மத்தியப் பிரதேச கூட்டுறவு வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். [1] இவர் போபாலின் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருந்தார் [1]

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பிபாலியா பஜ்கான் கிராமத்தில் பிறந்தவர் சந்தோஷ் மீனா. இவரது தந்தையின் பெயர் மறைந்த ஸ்ரீ ரூப்ராம் மீனா. இவர் இளங்கலைப்பட்டமும் மற்றும் சட்டத்தில் இளங்களைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் மாவட்ட அழைப்பாளராக இருந்தார். அவர் மீனா சமூகத்தில் இருந்து வந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Santosh Meena has been nominated for authorised member of Madhya Pradesh Cooperatives bank". Indian Cooperative. 16 October 2014. பார்க்கப்பட்ட நாள் 16 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷ்_மீனா&oldid=3820370" இலிருந்து மீள்விக்கப்பட்டது