சந்திரனில் முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்திரனில் முகம் தென்துருவம்
கிளெமென்டின் விண்கலம் எடுத்த சந்திரனின் தென்துருவ புகைப்படம்.
சைடோனியாவில் உள்ள ஒரு மேட்டு நிலப்பகுதியின் செயற்கைக்கோள் புகைப்படம், பரவலாக செவ்வாயில் முகம் என்றழைக்கப்பட்டது. பின்னர் மற்ற கோணங்களில் இருந்து கற்பனை செய்து நிழல்கள் சேர்க்கப்படவில்லை

சந்திரனில் முகம் ( Face on Moon) என்பது சந்திரனின் தென் துருவத்தில் உள்ள ஒரு பகுதியைக் குறிக்கிறது. 81.9° தெற்கு அட்சரேகை மற்றும் 39.27° கிழக்கு தீர்க்கரேகை என்ற ஆள்கூறுகளில் இப்பகுதி காணப்படுகிறது. முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி [1] ஒரு கணிணி மூலம் லூனார் தரைப்பட சுற்றுக்கலம் அனுப்பிய படங்களில் இருந்து தன்னிச்சையாக இப்பகுதி ஒரு முகமாக அடையாளம் காணப்பட்டது. டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச விண்வெளிப் பயன்பாடுகள் போட்டி 2013 இன் ஒரு பகுதியான விருது வெல்லும் திட்டத்தில் இது நிகழ்ந்தது.

இந்த வகையான ஒளியியல் தோற்ற மயக்கத்திற்குப் பெயர் உருவகம் என்று கூறலாம். சந்திரனில் முகம் இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரனில்_முகம்&oldid=1981248" இருந்து மீள்விக்கப்பட்டது