உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தப்தகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தப்தகா என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் சிறந்த திருமால் பக்தாவார். [1] இவரைப் பற்றி கருடப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தப்தகா ஒரு பிராமணர். பல தலங்களுக்கு சென்று திருமாலை வணங்கிவந்தார். ஒரு சமயம் காட்டினுள் சென்று வெளிவருவது பற்றி தெரியாமல் தவித்தார். ஒரு பெரிய மரத்தில் ஒரு பிணம் தொங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பிணத்தினை ஐந்து பேய்கள் தின்றுக்கொண்டிருந்தன. அதைக்கட்டு பயந்து சத்தமிட்டார். அதைக்கேட்ட பேய்கள் அவரை தின்ன போட்டிப் போட்டுக்கொண்டு வந்தன.

சந்தப்தகா திருமாலை வேண்டினார். அவரது வேண்டுதலுக்கு இணங்கிய திருமால், யட்சர்களின் தலைவனான மணிபத்ராவை அழைத்து அவருக்கு உதவும்படி கோரியது. மணிபத்ரா பேய்களை உதைத்து தள்ளினார். அந்தப் பேய்கள் பிராமணனை தஞ்சமடைந்து தங்களின் கதைகளைக் கூறின. பின்பு திருமாலின் வைகுண்டத்திற்கு சென்று மோட்சமடைந்தன.

பார்யுஷிதா, சுச்சிமுகா, ஷிக்ரகா, ரோதகா, லேகா என்பது அப்பேய்களின் பெயர்கள்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. பதினெண் புராணங்கள் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், ஞா.மீரா கங்கை புத்தக நிலையம் பக்கம் - 714-716
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தப்தகா&oldid=2097610" இலிருந்து மீள்விக்கப்பட்டது