உள்ளடக்கத்துக்குச் செல்

சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகிந்திரா சத்யம்
முன்னைய வகைபொது நிறுவனம்
நிலைடெக் மஹிந்திராவுடன் இணைப்பு
பிந்தியதுடெக் மஹிந்திரா
நிறுவுகை1987
செயலற்றது2013
தலைமையகம்ஐதராபாத்து
தொழில்துறைதகவல் தொழில்நுட்ப சேவை, தகவல் தொழில்நுட்ப ஆலோசனை
சேவைகள்தகவல் தொழில்நுட்ம், வணிக ஆலோசனை மற்றும் பிற சேவைகள்

மகிந்திரா சத்யம் (Mahindra Satyam) (முன்பு சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிமிடெட்) என்பது இந்தியாவின் ஐதராபாத்தைத் தளமாகக் கொண்ட ஒரு இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இது மென்பொருள் மேம்பாடு, கணினி பராமரிப்பு, தொகுக்கப்பட்ட மென்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் பொறியியல் வடிவமைப்பு சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை (இந்தியா) மற்றும் மும்பை பங்குச் சந்தை (இந்தியா) ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளது. பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கியது.[1] ஜூன் 2009 ஆம் ஆண்டு, இந்த நிறுவனமானது மகேந்திரா குழுமத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவான, டெக் மகேந்திரா இதனை கையகப்படுத்தியதன் தொடர்ச்சியாக “மகேந்திரா சத்யம்” என்ற தனது புதிய வர்த்தக அடையாளத்தை வெளிப்படுத்தியது. பின்னர் டெக் மகிந்த்ரா உடன் மகிந்த்ரா சத்யம் இணைந்து தற்போது டெக் மகிந்த்ரா என்று தனது அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது.

ஜனவரி 2009 இல், நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான இராமலிங்க ராசு நிறுவனத்தின் சொத்துக்களை 1 பில்லியன் டாலர் அளாவுக்கு தவறுதலாக உயர்த்தியதாக ஒப்புக் கொண்டா. இது குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது. இதன் மூலம் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்தது.[2][3] இது சத்யம் ஊழல் என்று அழைக்கப்பட்டது. மகிந்திரா குழுமத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவான டெக் மஹிந்திரா, நிறுவனத்தில் ஒரு பெரிய பங்கை வாங்கியது. ஜூன் 2009 இல் நிறுவனம் மஹிந்திரா சத்யம் என்று மறுபெயரிடப்பட்டது.[4] மஹிந்திரா சத்யம் 24 ஜூன் 2013 அன்று டெக் மஹிந்திராவுடன் இணைக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் 2008 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயைப் பெற்றது. உலகம் முழுவதும் 52,000 தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை வேலைக்கு வைத்திருந்தது.[5] இது இந்தியாவின் ஐந்து முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.[6] இது 185 பார்ச்சூன் 500 நிறுவனங்கள் உட்பட விரிவான வாடிக்கையாளர் பட்டியலைக் கொண்டிருந்தது. ஜனவரி 2009 இல் இந்தியாவின் மிகப்பெரிய பெருநிறுவன ஊழலுக்கு இந்த நிறுவனம் உட்பட்டது. அப்போதைய தலைவர் இராமலிங்க ராசு இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு எழுதிய கடிதத்தில், பெருநிறுவனக் கணக்குகள் பொய்யானதாகவும், நிறுவனத்தின் ரொக்கம் மற்றும் ரொக்கம் தொடர்பான சொத்துக்களில் தோராயமாக $1 பில்லியன் பொய்யாக சேர்த்ததாகவும் ஒப்புக்கொண்டார்..[7][8] நிறுவனத்தின் விற்பனையை மேற்பார்வையிட அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது.[9] டெக் மஹிந்திரா ஏப்ரல் 2009 இல் பெரும்பான்மையான பங்குகளை வாங்க முன்வந்தது. ஜூன் 2009 இல் நிறுவனம் மஹிந்திரா சத்யம் என மறுபெயரிடப்பட்டது.[10]

ஜனவரி 7,2009 அன்று, நிறுவனத்தின் பண சொத்துக்களை 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்த்திய ஒரு பெரிய கணக்கியல் மோசடி தனக்கு தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக அறிவித்த பின்னர் தலைவர் பதவியிலிர்நுது ராஜு வெளியேறினார்.[7]

2015 ஆம் ஆண்டில், இராஜுவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் சுமார் 800,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.[7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Howlett, Dennis (2009-01-15). "Satyam scandal – the fallout" (in en-GB). The Guardian. பன்னாட்டுத் தர தொடர் எண்:0261-3077. https://www.theguardian.com/technology/2009/jan/15/satyam-computer-services. 
  2. Balachandran, Manu. "The Satyam scandal: How India's biggest corporate fraud unfolded". Quartz India (in ஆங்கிலம்). Retrieved 2019-09-22.
  3. Scott, Mark (21 March 2012). "Tech Mahindra to Merge With Satyam". The New York Times (in ஆங்கிலம்). Retrieved 2019-09-22.
  4. "Satyam Computers is now Mahindra Satyam". Hindustan Times (in ஆங்கிலம்). 2009-06-21. Retrieved 2019-09-22.
  5. "Satyam: Just what went wrong?". Rediff (in ஆங்கிலம்). Retrieved 2019-09-22.
  6. Sangani, Priyanka (2019-04-05). "How the Satyam takeover episode taught Tech Mahindra many valuable business lessons". The Economic Times. https://economictimes.indiatimes.com/tech/ites/how-tech-mahindra-missed-the-growth-bus-after-satyam-acquisition/articleshow/68733871.cms. 
  7. 7.0 7.1 7.2 Balachandran, Manu. "The Satyam scandal: How India's biggest corporate fraud unfolded". Quartz India (in ஆங்கிலம்). Retrieved 2019-09-22.Balachandran, Manu. "The Satyam scandal: How India's biggest corporate fraud unfolded". Quartz India. Retrieved 22 September 2019.
  8. "SEC Charges Satyam Computer Services With Financial Fraud". sec.gov. Retrieved 2019-09-22.
  9. . 
  10. "Satyam Computers is now Mahindra Satyam". Hindustan Times (in ஆங்கிலம்). 2009-06-21. Retrieved 2019-09-22."Satyam Computers is now Mahindra Satyam". Hindustan Times. 21 June 2009. Retrieved 22 September 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]