சத்தியேந்திர துபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தியேந்திர துபே
பிறப்புநவம்பர் 27, 1973(1973-11-27)
இறப்பு27 நவம்பர் 2003(2003-11-27) (அகவை 30)
கயை
இறப்பிற்கான
காரணம்
கொலை செய்யப்பட்டார்
தேசியம்இந்தியா
கல்விபி. டெக் (சிவில் 1994), எம். டெக் (சிவில் 1996)
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்
தொழிற்நுட்ப நிறுவனம், பனாரசு இந்து பல்கலைக்கழகம் (தற்போது இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி)
பணிதிட்ட இயக்குநர்
பணியகம்இந்திய அரசு
அமைப்பு(கள்)இந்தியப் பொறியியல் பணி (IES), போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
அறியப்படுவதுஇந்திய தேசிய நெடுஞ்சாலைட் துறையில் நடந்த ஊழலை வெளிப்படுத்தியதால் கொல்லப்பட்டார்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அரசுப் பணியில் நேர்ந்த ஊழல்களை வெளிப்படுத்தல்
சொந்த ஊர்சிவான் மாவட்டம், பிகார்

சத்தியேந்திர துபே (Satyendra Dubey 27 நவம்பர் 1973–27 நவம்பர் 2003) என்பவர் இந்தியத் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணி செய்த பொறியாளர் ஆவார். ஊழலுக்கு எதிராக இடித்துரைத்ததால் இவர் கொல்லப்பட்டார்.[1]

பிறப்பும் படிப்பும்[தொகு]

பிகாரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த சத்தியேந்திர குமார் துபே கான்பூர் ஐ. ஐ. டி. என்னும் இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் பயின்று பொறியாளர் பட்டம் பெற்றார். தேசிய நெடுஞ்சாலைத் துறையில் இந்தியப் பிரதமரின் தங்க நாற்கரச் சாலை அமைப்புப் பணியில் அமர்த்தப்பட்டார்.

ஊழல் எதிர்ப்பு[தொகு]

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொடர்மாவில் நெடுஞ்சாலைத் துறையில் பணி செய்த காலத்தில் தாம் நேரில் கண்ட முறைகேடுகளையும் ஊழல்களையும் சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாக மடல் எழுதினார் துபே. தம் பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் கமுக்கமாக வைத்திருக்க வேண்டியும், ஊழல்களைத் தடுக்க வேண்டும் என்றும் எழுதினார். ஆனால் ஊழலை எடுத்துக் காட்டியவர் இவர்தான் என்று ஊழல் வாதிகளுக்குத் தெரிய வந்தது. அதன் காரணமாக பிகார் மாநிலம் கயா என்னும் ஊரில் வைத்து சத்தியேந்திர துபே கொல்லப் பட்டார். இச்செய்தி இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இக்கொலை வழக்கை இந்திய புலனாய்வுத் துறை ஆய்வு செய்து உசாவல் நடத்தியது. ஆறு ஆண்டுகள் கழித்து குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனை வழங்கப் பட்டது.

விருதுகள்[தொகு]

  • சத்தியேந்திர துபே நினைவு விருது என்னும் பெயரில் கான்பூர் ஐ.ஐ.டி. நிறுவனம் தொழில் முறையில் நேர்மையாகவும் மனித விழுமியங்களுடனும் பணி செய்த, அங்கு பயின்ற பழைய மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் 2005 ஆம் ஆண்டில் இவ்விருதைப் பெற்றார்.
  • இலண்டனைச் சார்ந்த பேச்சுரிமை நிறுவனம் (Index on Censorship) சத்தியேந்திர துபேயின் ஊழல் எதிர்ப்பு ஈகத்தைப் பாராட்டி அவர் இறப்புக்குப் பின் விருது வழங்கியது.

சான்றாவணம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Three get life in Satyendra Dubey murder case". தி இந்து. 27 மார்ச் 2010. http://www.thehindu.com/news/national/three-get-life-in-satyendra-dubey-murder-case/article315939.ece. பார்த்த நாள்: 22 செப்டம்பர் 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியேந்திர_துபே&oldid=2715429" இருந்து மீள்விக்கப்பட்டது