சத்தியாகிரக இல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தி இல்லம்
Gandhi House
சத்தியாகிரக இல்லம்
கொட்டகை
Map
நிறுவப்பட்டது1 சனவரி 2007 (2007-01-01)
அமைவிடம்15 பைன் சாலை, பழத்தோட்டம், இயோகனசுபர்கு
ஆள்கூற்று26°09′09″S 28°04′28″E / 26.152539°S 28.074392°E / -26.152539; 28.074392
வகைஇயோகனசுபர்கு நகரின் வரலாற்றுப் பாரம்பரியம்
மேற்பார்வையாளர்இலாரென் செகல்
வலைத்தளம்satyagrahahouse.com

சத்தியாகிரக இல்லம் (Satyagraha House) பொதுவாக காந்தி இல்லம் என்று அறியப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் இயோகனசுபருகு நகரத்தில் அமைந்துள்ள இந்த இல்லம் ஓர் அருங்காட்சியகமாகவும் விருந்தினர் மாளிகையாகவும் பயன்பாட்டில் உள்ளது. இந்த சத்தியாகிரக இல்லம் மகாத்மா காந்திக்கு சொந்தமானதாகும். 1908 மற்றும் 1909 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் காந்தி இங்கு வசித்து வந்தார். இயோகனசுபருகின் வரலாற்று பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இவ்வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தியாகிரகம் என்றால் உண்மையை வலியுறுத்துதல் என்பது பொருளாகும். இந்த வீட்டை கட்டிடக் கலைஞர் எர்மன் கல்லென்பாக் காந்திக்காகவும் தனக்காகவும் வடிவமைத்தார்.

வரலாறு[தொகு]

மாகாத்மா காந்தி, காந்தியின் செயலாளர் சோனியா செல்சின், எர்மன் கல்லென்பாக்

காந்தி 1893 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்காவில் 21 ஆண்டுகள் இருந்தார். இருப்பினும் அக்காலத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு வருகை தந்தார்.[1] வெள்ளையர்கள் மட்டும் பயணம் செய்யும் வண்டியில் பயணித்ததற்காக பீட்டர்மரிட்சுபர்கு இரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டபோதுதான் காந்தி இனப் பாகுபாடு பற்றி முதலில் அறிந்ததாகக் கூறப்படுகிறது.[2]

1904 ஆம் ஆண்டு காந்தி எர்மன் கல்லென்பாக்கைச் சந்தித்தார். கல்லென்பாக் 1896 ஆம் ஆண்டிலேயே தென்னாப்பிரிக்காவிற்கு வருகை தந்த செருமன்-யூத கட்டிடக் கலைஞராவார். 1907 ஆம் ஆண்டில் கல்லென்பாக் இரண்டு உள்ளூர் குடிசைகளின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வீட்டை வடிவமைத்தார். ஆனால் ஐரோப்பியக் கட்டடக் கலை முறையில் வீடு கட்டப்பட்டது. கிரால் என்றும் பெயரிடப்பட்டது. அதாவது ஆங்கிலத்திலும் ஆப்பிரிக்காவிலும் கிரால் என்பது கொட்டகை என்று பொருளாகும்.[3]

பலகைகள்

வீட்டில் குதிரை லாயமும் வலைப்பந்தாட்ட ஆட்டுகளம் போன்றவை இருந்தன. ஆனால் இரண்டுமே தியானம் மற்றும் தூய்மை வாழ்க்கைக்கு பயன்பட்டன. ஓர் ஏணி வழியாக மாடிக்குச் சென்று காந்தி அங்கு தூங்கினார். ஆனால் அவரும் கல்லென்பாக்கும் ஒரே சமையலறையைப் பகிர்ந்து கொண்டனர். தங்களுடைய விருந்தினர்களை வரவேற்பறையில் சந்தித்தனர். வீடுகளுக்கு இணைப்பு கதவுகள் இல்லை என்பதால் மற்றொன்றில் நுழைவதற்கு ஒரு வீட்டை விட்டு வெளியேற வேண்டியது அவசியம். கல்லென்பேக்கின் வாழ்க்கை இருவரின் வாழ்க்கையால் மாற்றம் கண்டது. அவர் தனக்காக செலவழித்த பணம் அதன் ஆரம்ப கால செலவில் பத்தில் ஒரு பங்காக குறைக்கப்பட்டது.[4] 1909 ஆம் ஆண்டு இருவரும் அங்கிருந்து வெளியேறினர்.[5] மேலும் இந்த வீட்டை 2009 ஆம் ஆண்டில் பிரெஞ்சு பயண நிறுவனம் ஒன்று வாங்குவதற்கு முன் பல உரிமையாளர்களைக் கொண்டிருந்தது. இவ்வீட்டை இந்திய தேசிய நினைவுச்சின்னமாகப் பெற விரும்பிய இந்திய அரசாங்கம் அதற்காக முயற்சித்தது.[6] பிரெஞ்சு நிறுவனம் அதை மீட்டெடுத்து 2011 ஆம் ஆண்டு ஓர் அருங்காட்சியகமாகவும் விருந்தினர் மாளிகையாகவும் பொதுமக்களுக்காகத் திறந்தது. அருங்காட்சியகம் இலாரன் செகல் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.[1] இன ஒதுக்கல் அருங்காட்சியகம் உட்பட மற்ற அருங்காட்சியகங்களையும் இவர் நிர்வகிக்கிறார்.[7] காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது உருவாக்கிய அகிம்சை என்ற உண்மை சக்தியை சத்தியாகிரகம் குறிக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Serene Satyagraha House opens". City of Johannesburg. Archived from the original on 8 July 2015. பார்க்கப்பட்ட நாள் 19 June 2013.
  2. Gandhi History in South Africa, retrieved 18 June 2013
  3. "Hermann Kallenbach" பரணிடப்பட்டது 2016-04-27 at the வந்தவழி இயந்திரம், Artefacts.co.za, retrieved 18 June 2013
  4. "Who was Hermann Kallenbach", DNA India.
  5. "the Museum". satyagrahahouse.com. பார்க்கப்பட்ட நாள் 19 June 2013.
  6. Smith, David (9 October 2009). "French firm wins bidding war for Gandhi house". The Guardian. https://www.theguardian.com/world/2009/oct/09/mahatma-gandhi-south-africa-house. 
  7. Musum, satyagrahahouse.com, retrieved 18 June 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியாகிரக_இல்லம்&oldid=3446836" இலிருந்து மீள்விக்கப்பட்டது