சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் சதுர்வேதமங்கலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.நான்கு வேதங்களை ஓதுகின்ற வேத விற்பன்னர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊராதலால் இப்பெயர் பெற்றது. சூரிய, சந்திர தீர்த்தம் கோயிலின் தீர்த்தங்களாகும்.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக ருத்ரகோடீசுவரர் உள்ளார். கோடி ருத்ரர்களும் இவரை வணங்கியதால் இவர் ருத்ரகோடீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி ஆத்மநாயகி ஆவார். கோயிலின் தல மரம் எலுமிச்சை ஆகும். முத்துவடுகு சித்தர் இங்குள்ள இறைவனைப் பாடியுள்ளார்.[1]

அமைப்பு[தொகு]

ராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஆவணி, மாசி மாதங்களில் இறைவன்மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்தில் பிரம்மா மலை வடிவில் காணப்படுகிறார். இத்தல விநாயகர் சித்தி விநாயகர் எனப்படுகிறார். திருச்சுற்றில் இறைவனின் சன்னதிக்கு முன்பாக சரபேசுவரர் சன்னதி உள்ளது. யாகம் நடத்துவது தொடர்பாக ஒரு முறை பிரம்மா, துர்வாசரின் சாபத்திற்கு ஆளானார். சாப விமோசனத்திற்காக பல சிவத் தலங்களுக்குச் சென்றார். அப்போது ஆங்கீரசர் என்னும் முனிவரைக் கண்டார். அவரது ஆலோசனையின்படி சிவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்றார்.[1]

விழாக்கள்[தொகு]

மாசியில் 10 நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இறைவிக்கு பௌர்ணமியில் விளக்கேற்றி அபிசேகம் நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]