சதீசு சுக்குரும்பல் இராகவன்
சதீசு சுக்குரும்பல் இராகவன் (Sathees Chukkurumbal Raghavan) இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூர் நகரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தின் உயிர் வேதியியல் துறையில் இணை பேராசிரியராக உள்ளார். இவர் கேரளாவிலுள்ள கண்ணூரைச் சேர்ந்தவர். உயிரியல் அறிவியல் பிரிவில் 2013 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [1] புற்றுநோய் உயிரணுக்களில் டி.என்.ஏ பழுதுபார்க்கப்படுவதைத் தடுக்கும் எசு.சி.ஆர் 7 என்ற வேதிச் சேர்மத்தைக் கண்டுபிடித்ததற்காக சதீசுக்கு பரிசு வழங்கப்பட்டது. கேரளாவிலுள்ள பையனூர் கல்லூரியில் விலங்கியல் துறையில் இளம் அறிவியல் பட்டமும், கண்ணூர் எசு.என் கல்லூரியில் விலங்கியல் முதுநிலை அறிவியல் பட்டமும் பெற்ற இவர், 1999 ஆம் ஆண்டு பனாரசு இந்து பல்கலைக் கழகத்தில் உயிர் வேதியியல் பிரிவில் முனைவர் பட்டமும், பெற்றுள்ளார்.
1999 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆய்வுக்கு அடுத்த மேற்படிப்பை முடித்தார். புற்றுநோய் மரபியல், மரபணுக்களின் உறுதியற்ற தன்மை, டி.என்.ஏ பழுது மற்றும் மறுசீரமைப்பு போன்றவை இவரது முக்கிய ஆராய்ச்சி ஆர்வங்களாகும். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dr. Samir K. Bramhachari Announces Shanti Swarup Bhatnagar Award 2013". Press Information Bureau, Government of India. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
- ↑ "Home Page of Sathees C Raghavan". Indian Institute of Science. Archived from the original on 2 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.