சஞ்சய் குமார் (இராணுவ வீரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபேதார் மேஜர்

சஞ்சய் குமார்

பிறப்பு3 மார்ச்சு 1976 (1976-03-03) (அகவை 47)
கலோல் பக்கேன், பிலாஸ்பூர் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
சார்புஇந்தியா இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
தரம் சுபேதார் மேஜர்
தொடரிலக்கம்13760533
படைப்பிரிவுஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸின் 13வது படையலகு
போர்கள்/யுத்தங்கள்கார்கில் போர்
விருதுகள் பரம வீர சக்கரம்

சுபேதார் மேஜர் [1] சஞ்சய் குமார் (Sanjay Kumar) பரம வீர சக்கரம் (பிறப்பு 3 மார்ச் 1976 [2] ) இந்திய இராணுவ அதிகாரியும் இந்தியாவின் படைத்துறையில் வழங்கப்படும் மிக உயர்ந்த |இராணுவ விருதான பரம வீர சக்கரம் பெற்றவருமாவார். [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சஞ்சய் குமார் இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கலோல் பக்கேன் கிராமத்தில் பிறந்தார். இராணுவத்தில் சேர்வதற்கு முன், தில்லியில் வாடகை வாகன ஓட்டுநராக பணிபுரிந்தார். [4] இறுதியாக இராணுவத்தில் சேரத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் இவரது விண்ணப்பம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது.

இராணுவ வாழ்க்கை[தொகு]

4 ஜூலை, 1999 இல், 13வது பட்டாலியன், ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸின் உறுப்பினராக, கார்கில் போரின் போது, ஏரியா பிளாட் முனையைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவின் முன்னணி வீராவார். அப்பகுதி பாக்கித்தான் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள எதிரியின் பதுங்கு குழியிலிருந்து இவர்கள் மீது இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்டது.

விளைவுகளையும், பிரச்சனையின் அளவையும் உணர்ந்த குமார், தனியாக ஊர்ந்து சென்று, ஒரு எதிரி பதுங்கு குழியை நோக்கிச் சென்றார். எதிரிகள் இவரை நோக்கி சுட்டதில் இவரது மார்பிலும் முன்கையிலும் இரண்டு குண்டுகள் பாய்ந்து காயம் ஏற்பட்டது.

காயங்களில் இருந்து ரத்தம் வழிந்தாலும், இவர் பதுங்கு குழியை நோக்கி தொடர்ந்து முன்னேறினார். சண்டையில், இவர் மூன்று எதிரி வீரர்களைக் கொன்றார். பின்னர் இவரது குழுவினர் அப்பகுதியை கைப்பற்றினர்.

பிப்ரவரி 2022 இல், இவர் சுபேதார் மேஜர் பதவியைப் பெற்றார். மேலும், புனேவுக்கு அருகிலுள்ள கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கழகத்தில் பணியமர்த்தப்பட்டார். [5]

விருதுகள்[தொகு]

இவரது தொழில் வாழ்க்கையின் போது, கார்கில் போரில் இவரது பங்கிற்காக இவருக்கு பரம வீர சக்கரம் ( சுதந்திர தினம் 1999) வழங்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  • Cardozo, Major General Ian (retd.) (2003), Param Vir: Our Heroes in Battle (in English), New Delhi: Roli Books, ISBN 978-81-7436-262-9{{citation}}: CS1 maint: unrecognized language (link)

குறிப்புகள்[தொகு]