சசூரி பொறியியல் கல்லூரி
Appearance
Other name | SACE |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 2001 |
தலைவர் | திரு ஏ. எம். கந்தசாமி |
முதல்வர் | முனைவர் கே. பாண்டியராஜன் |
கல்வி பணியாளர் | 186 |
மாணவர்கள் | 1460 |
அமைவிடம் | , , 11°13′1.99″N 77°29′22.43″E / 11.2172194°N 77.4895639°E |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.sasurieengg.com |
சசூரி பொறியியல் கல்லூரி (Sasurie College of Engineering) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருப்பூரில் உள்ள விஜயமங்கலத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். 2001 இல் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தக்கல்லூரியானது தொழிலதிபரான ஏ. எம். கந்தசாமியால் பொன்முடி முத்துசாமி கவுண்டர் அறக்கட்டளையின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது.
சசூரி பொறியியல் கல்லூரி 2001 ஆம் ஆண்டு திருப்பூரில் உள்ள விஜயமங்கலத்தில் தொடங்கப்பட்டது.
இங்கு ஐந்து இளநிலை படிப்புகள் மற்றும் நான்கு முதுநிலை படிப்புகளை வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக ஒரு இளநிலைப் படிப்பையும், ஒரு முதுநிலைப் படிப்பையும் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இளநிலை படிப்புகள்
[தொகு]- பி.இ. கணினி அறிவியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்
- பி.இ. மின் மற்றும் மின்னணுவியல்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. குடிசார் பொறியியல்
முதுநிலை படிப்புகள்
[தொகு]- முதுநிலை வணிக மேலாண்மை
- எம்.இ கணினி அறிவியல்
- எம்.இ. பேரளவு ஒருங்கிணைச் சுற்று
- எம்.இ. பி.இ.டி
- எம்.இ. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
- எம்.டெக். தகவல் தொழில்நுட்பம்
இந்த அறக்கட்டளையால் நிறுவப்பட்ட தமிழ்நாட்டின் பிற கல்வி நிறுவனங்கள் பின்வருமாறு:
- சசூரி பொறியியல் கல்லூரி, திருப்பூர்
- சசூரி பொறியியல் கல்வி நிறுவனம் பரணிடப்பட்டது 2020-08-09 at the வந்தவழி இயந்திரம், கோவை
- சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பூர்
- சசூரி கல்வியியல் கல்லூரி, திருப்பூர்
- நிருதி வித்யா பவன், திருப்பூர்
- மலர் ஏ.சி.இ பப்ளிக் பள்ளி, மனரை, திருப்பூர் பரணிடப்பட்டது 2019-09-08 at the வந்தவழி இயந்திரம்
- பில்லாபோங் உயர் சர்வதேச பள்ளி, அன்னூர்