சங்கு குளித்தல் (தமிழர் தொழிற்கலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கு குளித்தல் அல்லது சங்கெடுப்பு என்பது கடலினுள் மூழ்கி அதனடியில் இருக்கும் சங்குகளை எடுத்துவருவது ஆகும். தமிழர் தாயகப் பகுதிகள் நீண்ட கடற்கரைகளை அண்டிய நிலப்பகுதிகள் ஆகையால் சங்கு குளித்தல் பண்டைக் காலத்தில் இருந்து தமிழர்கள் செய்துவந்த ஒரு தொழிலாக உள்ளது. சங்கு குளித்தல் பற்றி தமிழ் இலக்கியங்களிலும் பல விரிவான குறிப்புகள் உள்ளன. இலங்கையில் நயினாதீவில் சங்கு குளித்தல் பெருமளவில் நடைபெற்றது. இந்தியாவில் தூத்துக்குடியில் இன்றும், நவீன முறைகளில் சங்கு குளித்தல் நடைபெறுகிறது.

சூழல் மாசடைதலால் சங்கு இனங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.[1] இலங்கையில் சங்கு சேகரிப்பிற்கு அரசு தடை போட்டுள்ளது. இது போன்ற காரணங்களால் சங்கு குளித்தல் இன்று வேகமாக மறைந்துவரும் ஒரு தொழில் ஆகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மாட்டுத்தலை சங்கு