உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கு கல் மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கு கல் மண்டபம் என்பது ஆற்றின் நடுவே சங்கு போன்ற அமைப்புடன் கட்டப்பட்டிருக்கின்ற கல் மண்டபத்தினைக் குறிப்பதாகும். ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் இரைச்சல் காற்றால் இங்கிருக்கும் சங்கு சத்தமாக ஊதப்படும். எனவே வெள்ளம் வருவதை கரையோர மக்கள் அறிந்து கொள்வார்கள். இந்த மண்டபங்கள் தமிழர்களின் நீர் மேலாண்மையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.

கல் மண்டபங்களின் அமைப்பு[தொகு]

மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உச்சியில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும். இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து கொள்வர். மக்கள் கோயில் போன்ற மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.

வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்கடித்துவிடும். பின்பு வெள்ளம் வடிகின்ற வேளையில் மீண்டும் சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும். இம்முறை சங்கின் சத்தம் கேட்டு மக்கள் தங்களின் இருப்பிடத்திற்கு திரும்புவார்கள்.

சங்கு மண்டப அமைவிடங்கள்[தொகு]

ஆழ்வார் திருநகரி தாமிரபரணி ஆற்றின் நடுவே மற்றும் காவேரி ஆற்றின் நடுவே தஞ்சாவூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சங்கு ஒலித்த அதிசய கல்மண்டப தொழில்நுட்பம்! - தி இந்து

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கு_கல்_மண்டபம்&oldid=2818325" இலிருந்து மீள்விக்கப்பட்டது