சங்கீத சாரதா
சங்கீத சாரதா Sangeet Sharada | |
---|---|
கதை | கோவிந்த் பல்லால் தேவால் |
கதாபாத்திரங்கள் |
|
வெளியீட்டு திகதி | 1899 |
மொழி | மராத்தி |
மையம் | சிறுவர் திருமணம் |
கருப்பொருள் | சமூக நாடகம் |
சங்கீத சாரதா (Sangeet Sharada) என்பது மராத்தி நாடக ஆசிரியர் கோவிந்த் பல்லால் தேவால் என்பவரால் 1899 ஆம் ஆண்டுஎழுதி இயக்கிய சங்கீத நாடகம் ஆகும். [1] இந்தியாவில் நாடக இலக்கியங்கள் முக்கியமாக வரலாற்று-புராணக் கதைகளில் கவனம் செலுத்தியபோது குழந்தை திருமணத்தைப் பற்றிய விஷயத்தைக் கையாள்வதன் மூலம் சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்தியும், விதிமுறைகளை மீறியும் நிகழ்த்தப்பட்ட இந்த நாடகம் மராத்தியில் முதல் முன்னோடி நாடகமாகக் கருதப்படுகிறது.[2] [3]
காலப்போக்கில், பால கந்தர்வன், விஷ்ணுபந்த் பக்னிஸ், பாலச்சந்திர பெந்தர்கர் போன்ற பல்வேறு மேடை நடிகர்கள் ‘சாரதா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[4][5] சங்கீத நாடக வடிவத்துடன், கோவிந்த் பல்லால் தேவால் எழுதி இசையமைத்த 50க்கும் மேற்பட்ட பாடல்கள் நாடகத்தில் இடபெற்று இருந்தன. மேலும் இதன் இசை காலப்போக்கில் ஒரு வழிபாட்டு அந்தஸ்தை அடைந்தது.
இந்த நாடகம் இந்தியாவில் சமூக நாடகத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. மேலும் 1929 ஆம் ஆண்டில் “சார்தா சட்டம்” என்றும் அழைக்கப்படும் ஹரிபிலாஸ் சர்தாவால் முன்மொழியப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, அது நாடகத்தின் பெயரால் “சாரதா சட்டம்” என்று தவறாக பெயரிடப்பட்டது.
சமூகத் தாக்கம்
[தொகு]சங்கீத சாரதா அரங்கேற்றப்படுவதற்கு முன்பு, வரலாற்று மற்றும் புராணக் கதைகளைக் கொண்ட நாடகங்கள் மராத்தி மேடைகளில் பிரபலமாக இருந்தன. குழந்தைத் திருமணத்தை சமூகத்திலிருந்து ஒழிக்கும் செய்தியுடன், இந்த நாடகம் 1899 ஆம் ஆண்டில் “இந்தியாவில் சமூக நாடகத்தில் ஒரு முன்னோடியாக” மாறியது. “சார்தா சட்டம்” என்றும் அழைக்கப்படும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, அதற்கு “சாரதா சட்டம்” என்று நாடகத்தின் பெயர் சூட்டப்பட்டதால் இந்த நிகழ்ச்சி மேலும் பிரபலமடைந்தது. செப்டம்பர் 28,1929 அன்று நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் ஹரிபிலாஸ் சர்தா என்பவரால் முன்மொழியப்பட்டது. உண்மையில் அவரது குடும்பப்பெயரின் பெயரால் அவ்வாறு அழைக்கப்பட்டது.
நாடகத்தின் பாடல்கள் இன்றும் பிரபலமாக உள்ளன. மதர இட்டுகா நா என்ற பாடல் 2011 ஆம் ஆண்டு வெளியான பால்கந்தர்வா என்ற மராத்தி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. சமீபத்தில் ஜனவரி 2012 இல், சங்கீத சாரதா-ஒரு ரியாலிட்டி ஷோ என்ற நாடகத்தின் நவீன பதிப்பு மும்பையில் அரங்கேற்றப்பட்டது. புத்துயிர் பெற்ற நாடகம் நாடகத்திற்கு ஒரு நவீன கண்ணோட்டத்தை வழங்கியது. அசல் நாடகத்தின் அனைத்து பாடல்களும் திய வகை இசையைப் பயன்படுத்தி அப்படியே பயன்படுத்தப்பட்டன. இந்த நாடகத்தை மும்பை பெருநகர மாநகராட்சியின் ஊழியர்கள் அரங்கேற்றினர்.[6] 2011 ஆம் ஆண்டில், இந்த நாடகம் பிரெய்லி எழுத்துக்களாக மொழிபெயர்க்கப்பட்டது.[7]
தற்செயலாக, 1909 டிசம்பர் 21 அன்று விஜயநந்த் நாட்டியகிரகத்தில் நாடகம் நிகழ்த்தப்பட்டபோது, நாசிக்கின் அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியர் ஏ. எம். டி. ஜாக்சன் சுதந்திர போராட்ட வீரர் அனந்த் லக்ஷ்மன் கன்ஹேரேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[8] இந்த நாடகத்தை அன்னாசாகேப் கிர்லோஸ்கரின் கிர்லோஸ்கர் நாடக மண்டலி நிகழ்த்தியது. அங்கு சாரதா என்ற முக்கிய கதாபாத்திரத்தை பால் காந்தர்வனே ஏற்று நடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gokhale, Shanta. "Beyond entertainment: Sangeet Sharada". http://www.mumbaimirror.com/index.aspx?page=article§id=57&contentid=2009041520090415023739989aeb54aa1. பார்த்த நாள்: June 17, 2012.
- ↑ Datta, Amaresh (1988). Encyclopaedia of Indian Literature: Devraj to Jyoti. South Asia Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8172016494. பார்க்கப்பட்ட நாள் June 17, 2012.
- ↑ Kasbekar Richards, Asha (2006). Pop Culture India!: Media, Arts, and Lifestyle. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1851096367. பார்க்கப்பட்ட நாள் June 17, 2012.
- ↑ "Stars: Vishnupant Pagnis (1892-1943)". பார்க்கப்பட்ட நாள் July 6, 2012.
- ↑ "Bapurao Pendharkar". பார்க்கப்பட்ட நாள் June 17, 2012.
- ↑ Manisha Nitsure Joshi (January 13, 2012). "आजची 'शारदा' येतेय!" (in Marathi). Maharashtra Times (Mumbai). http://maharashtratimes.indiatimes.com/rssarticleshow/11482563.cms. பார்த்த நாள்: June 25, 2012.
- ↑ Chatterjee, Swasti (December 6, 2011). "Compilation of five classic Marathi plays in Braille script released". Pune. http://www.indianexpress.com/news/compilation-of-five-classic-marathi-plays-in-braille-script-released/884550/0. பார்த்த நாள்: June 17, 2012.
- ↑ Dr. Saral Dharankar. "अनंत कान्हेरे पराक्रम दिनाची परिणामकारकता" (in Marathi). Nasik: Loksatta. பார்க்கப்பட்ட நாள் June 25, 2012.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)