சங்கீதா சிருங்கேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கீதா சிருங்கேரி
பிறப்புசிருங்கேரி, 13 மே
கல்விகேந்தரிய வித்யாலயா, பெங்களூர்
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2016 – தற்போது வரை

சங்கீதா சிருங்கேரி (Sangeetha Sringeri) ஒரு இந்திய நடிகையாவார். இவர் முதன்மையாக கன்னட மொழியில் பணிபுரிகிறார்; கன்னட தினசரி தொலைக்காட்சி நாடகமான ஹரஹர மகாதேவாவில் சக்தி / பார்வதி என்ற வேடத்தில் நடித்ததற்காக பிரபலமாக அறியப்படுகிறார். 2014 ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா அழகுப் போட்டியில் முதல் 10 இடங்களில் பிடித்த இவர் உலக சூப்பர்மாடல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். [1] தற்போது ரக்சித் ஷெட்டி நடித்த 777 சார்லி உள்ளிட்ட கன்னட திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பணியாற்றி வருகிறார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

சங்கீதா சிருங்கேரியில் ஒரு இராணுவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சிவக்குமார். கே இந்திய வான்படையின் முன்னாள் பணியாளர், இவரது தாயார் பவானி சிவக்குமார் ஒரு மூலிகை ஆரோக்கிய பயிற்சியாளர். இவர் பெங்களூர் கேந்தரிய வித்யாலயாவில் படித்தார். மேலும், தேசிய மாணவர் படையில் உறுப்பினராகவும், கருநாடக மாநில கோ-கோ அணியில் விளையாடி 2012இல் தங்கமும் வென்றுள்ளார்.

திரை வாழ்க்கை[தொகு]

ஸ்டார் சுவர்ணா என்ற கன்னடத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹரஹர மகாதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் சங்கீதா நடிப்பலகில் நுழைந்தார். [2] [3] இந்துக் கடவுளான சிவனை மையமாகக் கொண்ட புராண நாடகத்தில் இவர் சக்தி / பார்வதி என்ற வேடத்தில் நடித்திருந்தார். பின்னர் இவர் அதே நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சூப்பர் ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். [4]

இவரது முதல் திரைப்படம் ஏ + என்ற கன்னட திரைப்படமாகும். [5] ஏ + என்பது நடிகர் உபேந்திரா நடித்து ஏற்கனவே வெளியான ஏ என்ற படத்தின் தொடர்ச்சியான படமாகும். இது ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. [6] இந்த படத்தை உபேந்திராவின் கூட்டாளியான விஜய் சூர்யா இயக்கியிருந்தார். [7] இப்படத்தில் யஜஸ்வினி என்ற வேடத்தில் நடித்ததற்காக சங்கீதாவிற்கு விமர்சன ரீதியான பாராட்டுக்கள் கிடைத்தன. [8]

பரம்வா ஸ்டுடியோஸ் என்ற திரைப்பட நிறுவனம் தயாரித்து புஷ்கர் பிலிம்ஸ் வழங்கிய 777 சார்லி என்ற படத்தில் இரக்சித் ஷெட்டிக்கு இணையாக இவர் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். [9] [10] [11] முகநூல் மூலம் திரைப்படத்திற்காக இவர் தேர்வு செய்யப்பட்டார். 2,700 பிற உள்ளீடுகளில் இவருக்கு இந்த வேடம் கிடைத்தது. [12] [13] [14] படம் 2020இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. [15]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A flashback, a debut & more".
  2. "Sangeetha Sringeri in Hara Hara Mahadeva".
  3. "Suvarna to launch 'Hara Hara Mahadeva' from July 25".
  4. "Hara Hara Mahadeva's Sathi is now Super Jodi Contestant".
  5. "Sangeetha's A Plus Poster and Trailer out". Archived from the original on 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2021-03-06.
  6. "'A+' thriller, it was A in 1998".
  7. "Sangeetha makes her Sandalwood debut".
  8. "Watch A+ only for Sangeetha!".
  9. "TV's Sati Sangeetha Will Play The Female Lead in 777 Charlie".
  10. "Sangeetha bags 777 Charlie".
  11. "Pushkara Mallikarjuniah announces Sangeetha as 777 Charlie lead".
  12. "Sangeetha bags Rakshit Shetty-starrer 777 Charlie".
  13. "TV Celeb Sangeetha roped in as heroine for 777 Charlie".
  14. "TV's Sati is the leading lady of 777 Charlie".
  15. "Rakshit Shetty’s '777 Charlie' to have a pan-India appeal". https://www.newindianexpress.com/entertainment/kannada/2020/mar/25/rakshit-shettys-777-charlie-to-have-a-pan-india-appeal-2121218.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_சிருங்கேரி&oldid=3901037" இலிருந்து மீள்விக்கப்பட்டது